'கஸ்டடி பெருசா போகல.. ஆனா!'- வெங்கட் பிரபுவின் தளபதி68 படத்தை விஜய் தேர்ந்தெடுத்தது ஏன்? தயாரிப்பாளர் தனஜெயனின் விளக்கம் இதோ!

வெங்கட் பிரபுவின் தளபதி 68 படத்தை விஜய் தேர்ந்தெடுத்தது எப்படி,thalapathy vijay how choosed venkat prabhu for thalapathy 68 movie | Galatta

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தளபதி 68 படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபு குறித்து பேசியபோது, “மங்காத்தா என்கிற ஒரு படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன ஸ்டைலிஷான ஒரு ஆக்சன் படம். அஜித் சாரை வைத்துக்கொண்டு அவர் கலக்கி இருப்பார். ஒரு புது ஸ்டைலான படத்தை நாம் பார்த்தோம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான ஸ்டைலான படம் மங்காத்தா. அப்படி என்றால் அவர் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அவருடைய சரோஜா படமாக இருந்தாலும் சரி இப்போது வந்த மாநாடு படமாக இருக்கட்டும் எவ்வளவு பெரிய சிக்கலான ஒரு திரைக்கதை, அந்தத் திரைக்கதையை இவ்வளவு அழகாக நமக்காக வழங்கி பிரமாதமான ஒரு படைப்பாக கொடுத்திருக்கிறார். எனவே அவர் மீது எல்லோருக்குமே நம்பிக்கை இருக்கிறது.” என சொல்லியிருந்தார்.

தொடர்ந்து அவரிடம் “இதுவரைக்கும் எங்களுக்கு என்ன ஒரு பட்டியல் இருக்கும் இவர்களெல்லாம் அடுத்து தளபதி விஜயுடன் இணைவார்கள் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் அட்லீ நிறைய புதுப்புது இயக்குனர்கள் இருந்தார்கள் இவர்கள் இவர்கள் எல்லாரையும் தடி இயக்குனர் வெங்கட் பிரபுவை தளபதி விஜய் தேர்ந்தெடுத்து இருக்கிறார்” என கேட்டபோது, “நம்மைப் பொறுத்தவரையில் தான் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டார். மாநாடு படம் வந்த சமயத்திலேயே அவர் (வெங்கட் பிரபு) வந்து கதை சொல்லி இருக்கிறார். அப்போதே கதை பிடித்து விட்டது. தயாரிப்பு நிறுவனத்தை மட்டும் தெரிவிக்கிறேன் யாரை வைத்து இந்த படத்தை பண்ணலாம் என்பதை சொல்கிறேன் என்பது மட்டும் சொல்லி இருக்கிறார். அது AGS நிறுவனம் ஆர்வம் காட்டிய உடனே சரி என அவரும் (விஜய்) முடிவெடுத்து விட்டார். வேறு எந்த நடிகராக இருந்தாலும்… இப்போது வெங்கட் பிரபுவின் கடந்த படம் கஸ்டடி என்ற படம் பெரியதாக வெற்றியடையவில்லை. ஆனால் விஜய் சார் அதைப் பற்றி கவலையே படவில்லை. ஒரு படத்தை வைத்து ஒரு திறமையை நான் எடை போட மாட்டேன். இயக்குனர் வெங்கட் பிரபு மிகவும் திறமையான ஒரு இயக்குனர். இந்தப் படம் வெற்றி அடையவில்லை என்றால் அதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம். அவர் நினைத்ததை எடுக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அதற்காக அந்த திறமையை நான் நிராகரிக்க கூடாது. நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறேன். அவரும் கதை தயார் செய்திருக்கிறார் அதற்காக ஒப்புதலும் வாங்கி இருக்கிறார். இப்போது நான் எதற்காக வேண்டாம் என சொல்ல வேண்டும். எனவே நம்பிக்கையோடு போவோம் என வந்தார் பார்த்தீர்களா அங்கு தான் விஜய் சார் இருக்கிறார்!!" என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட தனஞ்செயன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்க் கீழ காணலாம்.
 

'அண்ணா வரார் வழிவிடு!'- தளபதி விஜயின் துள்ளலான டான்ஸில் செம்ம வெயிட்டாக வந்த லியோ பட
சினிமா

'அண்ணா வரார் வழிவிடு!'- தளபதி விஜயின் துள்ளலான டான்ஸில் செம்ம வெயிட்டாக வந்த லியோ பட "நா ரெடி" பாடல் இதோ!

தளபதி விஜய்க்கு அன்பைப் பொழிந்த நட்சத்திரங்கள்... பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்களின் பட்டியல் இதோ!
சினிமா

தளபதி விஜய்க்கு அன்பைப் பொழிந்த நட்சத்திரங்கள்... பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்களின் பட்டியல் இதோ!

'தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக்கில் இதெல்லாம் கவனித்தீர்களா?'- ஆர்வத்தை தூண்டும் HIDDEN DETAILS இதோ!
சினிமா

'தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக்கில் இதெல்லாம் கவனித்தீர்களா?'- ஆர்வத்தை தூண்டும் HIDDEN DETAILS இதோ!