தளபதி விஜய் பட ஆடை வடிவமைப்பாளர் பகிர்ந்த இனிப்பான செய்தி! குவியும் வாழ்த்துக்கள்
By Anand S | Galatta | December 09, 2022 20:07 PM IST
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரம நாயகரான தளபதி விஜய் அவர்கள் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. வருகிற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் ஐந்தாம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த தெறி மற்றும் பைரவா ஆகிய திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர் NJ சத்யா. தளபதி விஜய் மட்டுமல்லாமல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சிலம்பரசன்.TR மற்றும் M.சசிகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராக NJ சத்யா பணிபுரிந்துள்ளார்.
சமீபத்தில் சத்யா ஆடை வடிவமைப்பாளர் கோகிலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் இருவரும் தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.