புட்டபொம்மாவுக்கு டஃப் தர பீஸ்ட்-ல ஒரு பாட்டு வருது !
By Aravind Selvam | Galatta | January 20, 2022 13:34 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது,விஜய் பூஜா ஹெக்டே போன்றோர் தங்கள் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டனர்.சில பேட்ச் காட்சிகளின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தின் நடன இயக்குனர்களில் ஒருவரான ஜானி , தெலுங்கு சேனல் ஒன்றில் பேசுகையில் புட்டபொம்மா பாடல் இந்தியாவையே அதிரவைத்தது போல அடுத்து எதுவும் பாடல்கள் இருக்கிறதா என்று தொகுப்பாளர் கேட்க ரெண்டு பாட்டு வருது ஒன்னு தளபதி விஜய் படத்துல இன்னொன்னு ராம்சரண் படத்துல என குறிப்பிட்டுள்ளார்.இவை பீஸ்ட் மற்றும் RC 15 என தெரிகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Choreographer #JaniMaster hints about #Beast song ❤️ #BeastFirstSingle @actorvijay @AlwaysJani @anirudhofficial @hegdepoojapic.twitter.com/BjiERtCIl6
— #BEAST (@BeastTamilMovie) January 20, 2022