கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை மொத்த உலகத்தையும் படாதபாடு படுத்திவிட்டது. இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமலும் போதிய ஆக்சிஜன் வசதிகள் இல்லாமலும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
 
கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர இயலாமல் மருத்துவர்களும் அரசாங்கமும் திணறியது. பின்னர் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டது.கடந்த இரு வாரங்களாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திரையரங்குகள் திறக்கப்படுமா என பலரும் எதிர்பார்த்து வந்தனர். 

ஆனால் திரையரங்குகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி கொடுத்த போதும் மாலில் இருக்கும் உணவகங்களுக்கும் தியேட்டர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் திரையரங்குகள் திறக்கவும் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.