சுஷாந்த் சிங் ராஜ்புட் கடைசியாக நடித்த தில் பேச்சரா படத்தின் ட்ரைலர் !
By Sakthi Priyan | Galatta | July 06, 2020 16:44 PM IST
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட அவருடைய மரணம், சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. இன்னும் அதிலிருந்து மீளாமல் தவிக்கின்றனர் திரை விரும்பிகள்.
அவருடைய கடைசி ஹிந்திப் படமான தில் பேச்சரா படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது.இந்தப் படத்தில் சுஷாந்த் சிங், சஞ்சனா சங்கி மற்றும் பலர் நடித்துள்ளனர். முகேஷ் சப்ரா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2014ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த The Fault in our Stars என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக் தான் தில் பேச்சரா. இந்த ட்ரைலரை பார்த்த ரசிகர்கள்,
காதலின் அழகிய வெளிப்பாடாக இந்த படம் அமைந்துள்ளது. இதை பார்க்க சுஷாந்த் உயிருடன் இல்லையே. ட்ரெய்லரில் சுஷாந்த் சிரிப்பதை பார்த்தாலே கண்ணீர் வருகிறது. பாலிவுட்காரர்களின் வெறுப்பால் ஒரு உயிர் அநியாயமாக போய்விட்டது. சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
இப்படத்தை ஜுலை 24ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் நேரடியாக தனது OTTதளத்தில் வெளியிடுகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டாரைப் பார்க்க சந்தாதாரர்களாக இல்லாமல் இருப்பவர்களும் இந்தியாவில் இப்படத்தை இலவசமாகப் பார்க்கலாம். ஸ்டார் டிவியில் Kis Desh Mein Hai Meraa Dil என்ற நிகழ்ச்சியின் மூலம் கலையுலகில் தன் பயணத்தைத் துவக்கியவர் சுஷாந்த் சிங். அவருடைய கடைசி படத்தை ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்த ஹாட்ஸ்டார் வெளியிடுகிறது.
இதன்மூலம் இந்தியாவில் OTT தளத்தில் படம் பார்க்கும் பார்வையாளர் எண்ணிக்கையை ஹாட் ஸ்டார் அதிகரிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் சந்தா கட்டி பிற OTT தளங்களில் படம் பார்த்து வந்தவர்களை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள புதிய சலுகைகளை அந்நிறுவனங்கள் அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஹாட் ஸ்டார் ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்ரைலர் மூலம் சுஷாந்த் சிங் ராஜ்புட் மீண்டும் உயிர்ப்பித்தார் என்று ஆனந்த கண்ணீருடன் கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் என்றும் சுஷாந்த் இருப்பார். இந்த ட்ரைலரை ரசிகர்களோடு கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறது நம் கலாட்டா.
Gautham Menon's heroine onboard for Prabhu Deva's next directorial!
06/07/2020 03:11 PM
Multiple award winning music legend Ennio Morricone is no more!
06/07/2020 01:31 PM