தென்இந்திய நடிகர்சங்க தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விஷால்,கார்த்தி,நாசர் உள்ளிட்டோர் அடங்கிய பாண்டவர் அணி பாக்கியராஜ்,பிரசாந்த்,ஐசாரி கணேஷ் உள்ளிட்டோர் அடங்கிய சுவாமி சங்கராஸ் அணிகள் மோதுகின்றன.

Supestar Rajinikanth Tweets Abput South Indian Actors Association Elections 2019

இந்த தேர்தலில் முக்கிய நடிகர் நடிகைகள் பங்கேற்று வாக்களித்து வருகின்றனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது.இதனால் அவருக்கு தபால் முறையில் வாக்களிக்க தபால் ஓட்டு அனுப்பப்பட்டது.

Supestar Rajinikanth Tweets Abput South Indian Actors Association Elections 2019

இந்த ஓட்டு தனக்கு நேற்று மாலை 6.45 மணிக்கு தான் கிடைத்தது என்றும் இதனால் தன்னால் ஓட்டு போட முடியவில்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இது நடந்திருக்க கூடாது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

Supestar Rajinikanth Tweets Abput South Indian Actors Association Elections 2019