ரசிகர்களின் அன்புத்தொல்லையால் நீண்ட நாட்களாக அதிகாலை நடைபயிற்சியாய் நிறுத்தியிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தனது நடைபயிற்சியை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவருகிறது. ஆனால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை.

இந்நிலையில் இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று அவரது ரசிகர்கள் முகநூல் மற்றும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு வேளை AR முருகதாஸ் படத்திற்கு உடலமைப்பை ஃபிட்டாக வைத்துகொள்ள நடைபயிற்சியை துவங்கிவிட்டாரா என்ற கேள்வியில் உள்ளனர் ரசிகர்கள்.

 

பேட்ட திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இச்செய்தி ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தியாக அமைந்துள்ளது.