“சன் டிவி 30 கோடி” நிவாரண நிதி!-கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்குகிறது
By Anand S | Galatta | May 10, 2021 18:50 PM IST
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகவும் தீவிரமடைந்து மக்களையும் அரசாங்கத்தையும் திணறடித்து கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு புது உச்சத்தை தொட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக பல தொண்டு நிறுவனங்களும் முன்வந்துள்ள நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் படுக்கைகள் தட்டுப்பாடும் மக்களை ஆங்காங்கே மிகவும் அவதிக்குள்ளாகும் செய்திகளை நாம் பார்க்க முடிகிறது.
இதற்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில் இந்தியாவில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கக் கூடிய சன் டிவி குழுமம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு “30 கோடி ரூபாய்” நிதி உதவி செய்ய முன்வந்துள்ளது. இதுகுறித்து சன்டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சன் குழுமம் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் பல மொழிகளில் இயங்குகிறது மேலும் உலகம் முழுக்க அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களை கொண்டுள்ளது தொலைக்காட்சி நிறுவனமாகத் திகழ்கிறது.
Sun TV is donating Rs.30 crores to provide relief to those affected by the second wave of the Covid-19 pandemic. pic.twitter.com/APPDcURkib
— Sun TV (@SunTV) May 10, 2021
This STR film to have a direct OTT release? - Official word from director here!
10/05/2021 05:43 PM
Sunainaa tests positive for Covid-19 Corona Virus - Official Statement here!
10/05/2021 05:00 PM