கன்னட திரையுலகில் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்திய திரையுலகினரின் கவனம் பெற்ற திரைப்படம் ‘மஃப்டி’ இப்படத்தின் அதிகாரபூர்வ ரேமேக்கை ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தாயரிப்பில் ‘ஜில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஓபெலி N கிருஷ்ணா இப்படத்தை இயக்கவுள்ளார். அதன்படி படத்திற்கு 'பத்து தல' என்று பெயரிட்டனர். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சிலம்பரசன் TR நடிக்கிறார். கதாபாத்திரத்தின் பெயர் AGR என்று முன்னதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். மேலும் இவருடன் இணைந்து கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி ஷங்கர், கலையரசன், அனு சித்தாரா மற்றும் டிஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.KL படத்தொகுப்பு செய்கிறார். மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இவர் இசையில் ‘நம்ம சத்தம்’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இரண்டாம் பாடலுக்கான புரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கொண்டு வெளியாகும் மற்றுமொரு பெரிய படம் என்பதால் சிலம்பரசன் நடித்த இந்த பத்து தல படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
வரும் மார்ச் மாதம் 30 ம் தேதி இப்படம் உலகெங்கிலும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் முன்னோட்டத்தை நாளை மாலை 5.31 அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அட்டகாசமான போஸ்டருடன் படக்குழு பகிர்ந்துள்ளது. இதனையடுத்து இந்த அறிவிப்பு இணையத்தை கலக்கி வருகிறது.
உடல் பருமன் ஏற்பட்டு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த சிலம்பரசன். உடல் எடையை குறைத்து மீண்டும் திரைத்துறையில் அட்டகாசமாக என்ட்ரி கொடுத்தார். அதன் படி தொடர் வெற்றிகளை சிலம்பரசன் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸ் பெற்றது. மேலும் தொடர் வெற்றிகளை தேர்ந்த கதையின் மூலம் சிலம்பரசன் தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இதனாலே இந்த பத்து தல படத்திற்கும் ஒரு தனி எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.