RRR படத்தை ஆஸ்காருக்கு சமர்ப்பித்த படக்குழு! விவரம் உள்ளே
By Anand S | Galatta | October 06, 2022 16:11 PM IST
படத்திற்கு படம் பிரம்மாண்டத்தின் புதிய உச்சத்தை தொட்டு வரும் இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மகதீரா, நான் ஈ மற்றும் பாகுபலி ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து மாபெரும் வெற்றிப் படங்களாக கொண்டாடப்பட்டன. பாகுபலி 1&2 திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து SS.ராஜமௌலி இயக்கிய திரைப்படம் RRR.
கடந்த மார்ச் 25-ம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸான RRR திரைப்படம் பல கோடி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹாட்டானதோடு 1100 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது. RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள RRR திரைப்படத்தை DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ளார். முன்னதாக RRR திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த நிலையில் தற்போது RRR படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
ஆஸ்கார் விருதுகளில் முக்கிய பிரிவுகளான சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் & நடிகை, சிறந்த பாடல், சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் RRR திரைப்படத்தை படக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர். இதுகுறித்து RRR படக்குழுவினர் வெளியிட்ட பதிவு இதோ…
The categories in which #RRR is going to be officially submitted for Oscars. #RRRForOscars pic.twitter.com/v1CoLnbilO
— Vamsi Kaka (@vamsikaka) October 6, 2022
CONFIRMED... 'RRR' APPLIES FOR INDIVIDUAL CATEGORIES AT OSCARS... Team #RRRMovie are optimistic about their chances and have applied for *individual categories* at the #Oscars... Here's a heartfelt note from Team #RRR...#RRRForOscars pic.twitter.com/tnCmG9yvI8
— taran adarsh (@taran_adarsh) October 6, 2022