தனது கனவு படைப்பாக புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனை அடுத்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரம்மிப்பின் உச்சமாக தயாராகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டா தரணி அவர்கள் கலை இயக்குனராக பணியாற்ற, ரவிவர்மனின் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் பல தொகுப்பு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்களும் ட்ரெய்லரும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நாளை மறுநாள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக பொன்னியின் செல்வன் 2 வெளிவர தயாராக இருக்கிறது. இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலில் பிரத்யேக பேட்டி அளித்த படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், நம்முடன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் நாம் எவ்வளவு எடுத்துக் கொடுத்தாலும் திரும்பத் திரும்ப இதில் ஒரு மாற்றம் இதில் ஒரு மாற்றம் என பலமுறை தொடர்ந்து உங்களிடம் கேட்டு அந்தப் படைப்புக்கான ஒரு போர் எந்த இயக்குனரோடு இருக்கும்? என கேட்டபோது,
“இயக்குனர் மணிரத்னம் அவர்களே எடுத்துக் கொள்வோம். அது அவ்வளவு எளிது கிடையாது இணைந்து பணியாற்றுவதற்கு, நீங்கள் ஒரே மாதிரியான எண்ணத்தில் இல்லாதபோது. அவரோடு சில ஆண்டுகள் பயணம் செய்திருப்பதால் கொஞ்சம் தெரியும். அவர் சினிமாவை எப்படி பார்க்கிறார். எனவே இது எளிது, ஏதாவது சொன்னாலும் அது ஒரு இயக்குனர் என்பதற்காக சொல்வதாக இல்லாமல் அந்த திரைப்படத்திற்கான நன்மைக்காகவே சொல்வார். அவரும் சரி ராஜமௌலியும் சரி... இப்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. இப்போதும் ஒரு ஷாட் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்ய வேண்டும் என நினைக்கிறோம் இந்த டிஸ்கஷன் எல்லாம் ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு கூட நடக்கும். இது இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்ற இயக்குனர்களின் வேட்கை தான். அது காட்சியில் வரும் போது 0.00001 சதவிகிதம் தான் மொத்த படத்தில், அது ரசிகர்களுக்கும் பெரியதாக தெரியாது”
என படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…