ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து.. என்னென்ன படங்கள் பார்க்கலாம்? தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் படங்களின் பட்டியல் இதோ..

பொங்கலுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் படங்களின் பட்டியல்  - list of pongal special movies in television | Galatta

என்னத்தான் பண்டிகை நாட்களில் புதுப்படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்தாலும் பெரும்பாலான மக்களுக்கு பொழுதுபோக்கு என்பது தொலைக்காட்சி முன்பு தான். குறிப்பாக நடுத்தர மக்களுக்கு.  ‘இந்திய தொலைகாட்சிகளில் முதன் முறையாக’ என்று குறிப்பிட்டு முன்னணி நடிகர்களின் படங்களை காலம் காலமாக பண்டிகை நாட்களில் ஒளிப்பரப்பி வருகின்றது தொலைகாட்சிகள். அதை பின் தொடரவும் ஒரு கூட்டம் உள்ளது. ஒடிடி போன்ற தளங்கள் வந்தாலும் மக்கள் இன்றும் பெரிதளவு நாடும் ஊடகமாக தொலைக்காட்சி இருந்து வருகிறது.

பண்டிகை நாட்களிலே தொடர் விடுமுறை கொண்ட பண்டிகை என்ற சிறப்பம்சத்தை கொண்டுள்ளது பொங்கல் பண்டிகை. இந்த ஆண்டு பொங்கலையொட்டி அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான ‘துணிவு’ படமும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கிய ‘வாரிசு’ படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, தொடர் விடுமுறையையொட்டி பொதுமக்களின் முன்பதிவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இருந்தாலும் ஒரு வாரத்தில் ஒரு படங்களை தான் பார்க்க முடியும் என்ற நிலை சராசரி குடும்பங்களில் உள்ளது. அதானாலே பெரும்பாலான பண்டிகை நாட்களில் மக்கள் டீவி முன்பு ஆஜராவது வழக்கம். அதன் படி வரும் பொங்கல் பண்டிகை நாட்களை முன்னிட்டு தொலைக்காட்சிகள் போட்டி போட்டு கொண்டு படங்களை ஒளிபரப்பவுள்ளது. அப்படி மக்களின் முக்கிய தொலைக்காட்சிகளில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பபடவுள்ளது. அந்த படத்தின் நிலை என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை :

 

சன் தொலைக்காட்சி :

பெரும்பாலான நேரங்களில் சீரியல் தொடர்களே ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சன்டீவி. தனித்துவமான தொடர்களை ஒளிபரப்புவதால் அதற்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே காலம் காலமாக தக்க வைத்து முன்னிலையில் உள்ளது. இருந்தாலும் பண்டிகை நாட்களில் எந்தவொரு குறையும் வைக்காமல் மக்களை ஈர்க்குமளவு படங்களை கொடுப்பதில் காலம் தோற்றே சன்டீவி புத்திசாலிதான்.  

இதில் வரும் ஜனவரி 15 அன்று காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 2019 அன்று வெளியான மெகா ஹிட் திரைப்படமான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படமும் அதனை தொடர்ந்து மதியம் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படமும் ஒளிப்பரப்பாகவுள்ளது. மேலும் தனுஷ் நித்யா மேனன், பாரதி ராஜா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படம் மாலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்படவுள்ளது.

மற்றும் ஜனவரி 16  மாட்டு பொங்கல்  தினத்தையொட்டி காலை 11 மணிக்கு ரஜினி, விஜய் சேதுபதி நடித்த மெகா ஹிட் திரைப்படமான ‘பேட்ட’ படமும் மதியம் 2 மணியளவில் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘தெறி’ படமும் ஒளிபரப்பப்பட உள்ளது. மாலை 6.30 மணிக்கு திரைக்கு வந்து சில மாதங்களே ஆன விஷாலின் ‘லத்தி’ படம் ஒளிப்பரப்பாகிறது. கிட்டத்தட்ட கமர்ஷியலாக ஹிட் அடித்த படங்களை தேர்ந்தெடுத்து பொங்கல் பண்டிகையொட்டி வெளியிடுகிறது சன் தொலைக்காட்சி.

  shruti haasan reveals why she skipped waltair veerraya event

விஜய் தொலைக்காட்சி :

நிகழ்சிகளில் சுவாரஸ்யத்தையும் புதுமையும் பிரம்மாண்டத்தையும் தனித்துவமாக வைத்திருக்கும் விஜய் தொலைக்காட்சியில் பொங்கல் விருந்தாக ஜனவரி 15 காலை  விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து கடந்த ஆண்டு வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படமும் மதியம் 2 மணிக்கு உலகளவில் பிரபலமான விருதுகளை குவித்து வரும் ‘காந்தாரா’ படமும் ஒளிபரப்பவுள்ளது. மேலும் மிக முக்கியமாக சர்வதேச விருதுகளையும் உலகளவில் அங்கீகாரமும் பெற்ற ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை மாலை 5.30மணியளவில் விஜய் தொலைக்காட்சி திரையிடவுள்ளது

மேலும் மாட்டு பொங்கலான அடுத்த நாளில் காலை 10 மணிக்கு அருண் விஜய் குடும்பத்துடன் நடித்த ‘ஒ மை டாக்’ திரைப்படமும், மதியம் 12.30 மணிக்கு கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘விருமன்’ படமும் ஒளிப்பரப்பவுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு மெகா ஹிட் அடித்த உலக நாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில்  உருவான ‘விக்ரம்’ படம் மாலை 4 மணிக்கு ஒளிபரப்படுகிறது.  

இதுமட்டுமல்லாமல் புது புது நிகழ்சிகளையும் அறிமுக படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிரபலமான பிளாக் பஸ்டர் படங்களை களத்தில் இறக்கி மாஸ் காட்டியுள்ளது விஜய் தொலைக்காட்சி. இந்த பொங்கல் ஒளிபரப்பு போட்டியில் கவனம் பெற்றுள்ளது விஜய் தொலைக்காட்சி  

shruti haasan reveals why she skipped waltair veerraya event

ஜீ தமிழ் தொலைக்காட்சி

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘காபி வித் காதல்’ படம் ஜனவரி 15 ம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும் அதே நாளில் 3.30 மணியளவில் அருண் விஜய் நடிப்பில் ‘யானை’ படமும் ஒளிபரப்பப்பட உள்ளது. மாட்டு பொங்கல் தினத்தையொட்டி பிரபு தேவா நடிப்பில் வெளியான மை டியர் பூதம் திரைப்படம் மதியம் 1 மணிக்கும், சசிகுமாரின் ‘காரி’ மாலை 3.30 மணிக்கும் ஒளிப்பரப்பவுள்ளது.  கிட்டத்தட்ட கடந்த ஆண்டு சரியான வரவேற்பு கிடைக்காத படங்களையே ஜீ தொலைக்காட்சி இறக்கியுள்ளது.

shruti haasan reveals why she skipped waltair veerraya event

கலைஞர் தொலைக்காட்சி

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட அதிகளவு திரைப்படங்களின் உரிமையை வாங்கி தக்க வைத்துள்ள  கலைஞர் தொலைகாட்சியின் மீது இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி  பொங்கல் தினத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படமும், மதியம் 1.30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.

மேலும் மாட்டு பொங்கலையடுத்து மதியம் 1.30 மணிக்கு சிம்பு கவுதம் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது. கலைஞர் தொலைக்காட்சி கடந்த ஆண்டு பிளாக் பாஸ்டர் அடித்த படங்களை களம் இறக்கி விஜய் தொலைகாட்சிக்கு போட்டியாய் இறங்கியுள்ளது

shruti haasan reveals why she skipped waltair veerraya event

சினிமா

"குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி" - வாரிசு படக்குழு வெளியிட்ட Surprise Glimpse .. வைரலாகி வரும் வீடியோ..

“படப்பிடிப்பில் இதனால் தான் ஷ்யாம் என்னை திட்டினார் “ - வாரிசு பட நடிகை சம்யுக்தா..  முழு வீடியோ இதோ
சினிமா

“படப்பிடிப்பில் இதனால் தான் ஷ்யாம் என்னை திட்டினார் “ - வாரிசு பட நடிகை சம்யுக்தா.. முழு வீடியோ இதோ

அஜித்தின் துணிவு பட வாய்ப்பை நழுவ விட்ட வாரிசு பட நடிகை – சுவாரஸ்யமான தகவல் இதோ ..
சினிமா

அஜித்தின் துணிவு பட வாய்ப்பை நழுவ விட்ட வாரிசு பட நடிகை – சுவாரஸ்யமான தகவல் இதோ ..