ப்ரின்ஸ் பட வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம் !
By Aravind Selvam | Galatta | October 04, 2022 10:09 AM IST
தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் ப்ரின்ஸ் படத்தில் நடிக்கிறார்.இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் bilingual ஆக உருவாகிறது.இந்த படத்தினை தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த Jathi Rathnalu பட இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.
தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.சத்யராஜ்,பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் Maria Ryaboshapka என்ற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.2022 தீபாவளி ரிலீசாக ப்ரின்ஸ் ரிலீசாக உள்ளது.இந்த படத்தின் வெளிநாட்டு உரிமத்தை பிரபல விநியோக நிறுவனமான ஹம்சினி எண்டெர்டைன்மெண்ட் கைப்பற்றியுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
.@Siva_Kartikeyan 's #Prince Entire Overseas Distribution Rights Acquired by #HamsiniEntertainment 🕺
— Hamsini Entertainment (@Hamsinient) October 3, 2022
A Widest & Grandest Release on cards 💥
Let's make this #Diwali a More memorable one 🎉 #PrinceDiwali @anudeepfilm @MusicThaman @SVCLLP @SureshProdns @ShanthiTalkies pic.twitter.com/WzRh4ISjES