இந்திய சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக, சினிமா ரசிகர்களின் அபிமான கதாநாயகர்களில் ஒருவராக திகழும் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய படங்களின் வரிசையில் 3வது முறையாக அஜித்குமார் - போனி கபூர் - H.வினோத் - நீரவ்ஷா கூட்டணியில் துணிவு படம் தயாராகி இருக்கிறது.
 
அஜித் குமாருடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடித்துள்ள துணிவு திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக துணிவு படத்திலிருந்து வெளிவந்த பாடல்களும் ஹிட்டடித்துள்ளன. இந்நிலையில் துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள கேங்ஸ்டா பாடலை எழுதி-பாடிய சிங்கப்பூர் தமிழரான ஷபீர் சுல்தான் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
 
அந்த வகையில் கேங்ஸ்டா பாடல் தளபதி விஜயின் வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள தீ தளபதி பாடலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருப்பதாக வரும் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, “ஆமாம் நான் இன்ஸ்டாகிராம் லைவில் இருந்தபோது கேட்டிருந்தார்கள். நீங்கள் எழுதிய வரிகள் பதிலடி கொடுக்கும் விதமாக இருக்கிறதே? என சொன்னார்கள். சத்தியமாக அப்படி இல்லை!! இந்தப் பாடலை நான் கோவிட் சமயத்தில் எழுதினேன் அப்போது எப்படி நான் பதிலடி கொடுத்து இருப்பேன். நான் அந்த பாடலை கேட்டு இருக்க மாட்டேன் அல்லவா... தீ தளபதி பாடலை.. எனவே அது கண்டிப்பாக இல்லை. இதில் இருக்ககூடிய விஷயங்களை எழுதியது கதை, அவருடைய பர்சனாலிட்டி, படம் மற்றும் களத்திற்காக எழுதியது. அது சில பேருக்கு அப்படி தோன்றுகிறது போல் தெரிகிறது. ஆனால் அது என்னுடைய நோக்கம் அல்ல!!” என தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஷபீர் சுல்தானின் முழு பேட்டி இதோ…