சிந்துபாத் திரைப்பட விமர்சனம்
By Sakthi Priyan | Galatta | June 27, 2019 15:00 PM IST
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற தரமான படைப்புகளை இயக்கிய இயக்குனர் SU அருண்குமார் இயக்தில் இன்று வெளியான ஆக்ஷன் ட்ராமா படம் சிந்துபாத். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த இப்படத்தில் அஞ்சலி, ஜார்ஜ் மரியன், விவேக் பிரசன்னா, லிங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.
சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு வேலைக்கு செல்லும் வெண்பாவாகிய அஞ்சலி இறுதியில் கணவருடன் சேர்கிறாரா என்பது தான் இந்த சிந்துபாத் படத்தின் கதைச்சுருக்கும். இதில் பல கமர்ஷியில் கூறுகளை சேர்த்து திரை வாயிலாக விருந்து வைத்துள்ளார் இயக்குனர்.
ஃபேமிலி ஆடியன்ஸின் நாடியை அறிந்து படம் இயக்குவதில் அருண்குமாரும் ஒருவர். காதுகேட்காதவராக வரும் சேதுபதியின் நடிப்பு சிறப்பு. கதையின் நாயகனாக தெரிபவர், முழுநேர கமர்ஷியல் கதா நாயகராக தெரிகிறார். முதல் பாதியில் பொறுப்பற்ற திருடனாக வருவபர், தாய்லாந்து நாட்டில் துலைந்த மனைவி தேடி அலைகிறார். சில இடங்களில் இயல்பை மீறி செயல்படுகிறார் விஜய்சேதுபதி.
அறிமுக நடிகர் சூரியா விஜய்சேதுபதியை பாராட்டுவதில் கடமை பட்டிருக்கிறோம். டான்ஸ், டைமிங் காமெடியாகட்டும், எமோஷனல் காட்சியாகட்டும் அசால்ட்டாக அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார் சூர்யா. படத்தின் முழு நேரமும் சூப்பர் எனும் ரோலில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் சண்டை காட்சியில் உயர்ந்த மாடியிலிருந்து குதிப்பது போன்ற லாஜிக் மீறல் காட்சியில் எதார்த்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சண்டை காட்சிகள் சற்று சலிப்பு தன்மையை தந்தாலும், கமர்ஷியல் படத்திற்கு தேவை என்பதால் திணிக்கப்பட்டுள்ளது. சினமாத்தனமாக தெரிந்தது. மேலும் அடுத்தடுத்த காட்சிகள் என்னவென்று கண்டுபிடிக்கும் வகையில் இருந்தது.
வழக்கம் போல் ரூபனின் எடிட்டிங் அசத்தலாக இருந்தது. தென்காசியாக இருந்தாலும், தாய்லாந்தாக இருந்தாலும் தனது மூன்றாம் கண்ணால் படம்பிடித்து திரையில் சமர்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். முழுக்க முழுக்க நாடக பாணியில் கமர்ஷியலாக தெரிந்தாலும், தோல் திருட்டு எனும் கருத்தை புகுத்தி தனித்து நிற்கிறார் இயக்குனர்.
ராக்ஸ்டார் ராபர், நெஞ்சே உனக்காக இந்த இரு பாடல்களை தவிர்த்து வேறெந்த பாடல்களும் மனசில் நிற்கவில்லை. பின்னணி இசை போற்றி பேசக்கூடிய அளவில் இல்லை. Ok-வாக இருந்தது. லாஜிக் பார்ப்பவர்களுக்கு இந்த படம் தீணிபோடாது. மொத்தத்தில் 80-களில் வெளியான ரஜினி-SP முத்துராமன் படம் போல் தெரிகிறது இந்த சிந்துபாத்.
கலாட்டா ரேட்டிங் - 2.5/5