இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக தமிழில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடரந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

அந்தவகையில் தெலுங்கில் நந்தமூரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் வீர சிம்ம ரெட்டி மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் வால்டர் வீரய்யா ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலார் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் The Eye எனும் ஹாலிவுட் திரைப்படத்திலும் தற்போது ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசனை இன்ஸ்டாகிராமில் மட்டும் 2.16 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் பதிவிட்ட அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வழக்கமாக அனைவரும் தங்களது அழகான புகைப்படங்களையே சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள். ஆனால் மாறாக தனது மிகவும் மோசமான தலைமுடி நாளின் புகைப்படம், காய்ச்சல் மற்றும் சைனஸ் பாதிப்பு கொண்ட நாள் மற்றும் மாதவிடாய் நாள் என குறிப்பிட்டு ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை அனைவரும் தற்போது பாராட்டி வருகின்றனர். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)