தமிழக சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் மிக கோலாகலமாக நிறைவடைந்தது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை 20 போட்டியாளர்கள் ஆரம்பத்திலேயே பிக் பாஸ் வீட்டில் களமிறங்கினர்.
GP முத்து (யூட்யூபர்), அஸீம் (சீரியல் நடிகர்), அசல் கோலார் /வசந்த் (இசைக்கலைஞர் / பாடகர்), ஷிவின் கணேசன் (திருநங்கை - பொது ஜனம்), ராபர்ட் மாஸ்டர் (நடன இயக்குனர்), ஷெரினா (மாடல்), ராம் ராமசாமி (மாடல் / நடிகர்), ஜனனி (இலங்கை - செய்தி வாசிப்பாளர்), ADK-ஆர்யன் தினேஷ் கனகரத்னம் (இலங்கை - இசைக்கலைஞர் / RAP பாடகர்), அமுதாவாணன் (STAND UP காமெடியன் / நடிகர்), VJ மகேஷ்வரி (தொகுப்பாளர் / நடிகை), VJ கதிரவன் (தொகுப்பாளர்), ஆயிஷா (சீரியல் நடிகை), தனலக்ஷ்மி (டிக்டாக்கர் - பொது ஜனம்), ரச்சிதா மகாலக்ஷ்மி (சீரியல் நடிகை), மணிகண்டா ராஜேஷ் (நடிகர் -ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்), சாந்தி அரவிந்த் (நடன இயக்குனர் / நடிகை), விக்ரமன் (அரசியல்வாதி-விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பேச்சாளர்) / முன்னாள் அரசியல் தொகுபாளர் -கலாட்டா), குயீன்ஸ் ஸ்டான்லி (வளரும் நடிகை), நிவிஷினி (சிங்கப்பூர் மாடல் - பொது ஜனம்) ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். இவர்கள் தவிர வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல நடிகை மைனா நந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
இறுதிப் போட்டியில் அசீம் டைட்டில் வின்னராக வெற்றி பெற விருதும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன் மற்றும் ஷிவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையே பிடித்தனர். குறிப்பாக திருநங்கையாக இறுதிப் போட்டி வரை மிகச் சிறப்பாக விளையாடி பலருக்கு முன் உதாரணமாக திகழ்ந்த ஷிவின் வெற்றி பெறாதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.
முன்னதாக பிக் பாஸ் வீட்டில் தனது தாயை குறித்து மிகவும் எமோஷனலாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஷிவின் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு தனது தாயை சந்தித்த நிகழ்வு குறித்து நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசினார்.
அப்படி பேசுகையில், “அம்மா மிகவும் சந்தோஷமாகவும் மிகவும் பெருமையுடனும் இருக்கிறார்கள். அதை அவர்களே சொல்லி அவர்களின் வாயால் கேட்கும் போது இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. நான் நினைத்த நிறைய விஷயங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே சமயத்தில் நடக்கிற போது… நான் எதிர்பார்க்கவே இல்லை, அனைத்தும் எனக்கு ஆச்சரியமாகவும் மாயாஜாலமாகவும் இருக்கிறது. இதையெல்லாம் நம்புவதற்கு எனக்கு கொஞ்சம் நாள் ஆகிறது. என் அம்மாவா இப்படி பேசறது? நம்ம அம்மா இல்லையே ? nஎன்றெல்லாம் தோன்றுகிறது” என மிகுந்த மகிழ்ச்சியோடு ஷிவின் பகிர்ந்து கொண்டார். அந்த முழு பேட்டி இதோ…