தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வருகிறது நானே வருவேன் திரைப்படம். மீண்டும் இயக்குனர் செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் செல்வராகவன் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக இயக்குனர் செல்வராகவன் நடிகராக களமிறங்கிய முதல் படம் சாணிக் காயிதம்.

ராக்கி திரைப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகியுள்ள சாணிக் காயிதம் படத்தை சீன் ஸ்கிரீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மாறுபட்ட கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் படத்துக்கு யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசை அமைக்கிறார்.

விரைவில் சாணிக் காயிதம் திரைப்படம் நேரடியாக OTT தளங்களில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சாணிக் காயிதம் படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் சாணிக் காயிதம் படத்தின்  புகைப்படங்கள் இதோ…