போர்த் தொழில் படத்திற்கு பின் சரத்குமாரின் அடுத்த அதிரடி போலீஸ் அவதாரம்... பரம்பொருள் படத்தின் கவனிக்க வைக்கும் டீசர் இதோ!

அமிதாஷ் - சரத்குமாரின் பரம்பொருள் படத்தின் டீசர் வெளியீடு,sarathkumar amithash in paramporul movie teaser out now | Galatta

தென்னிந்திய சினிமாவில் இன்றைய அமையாத நடிகர்களில் ஒருவராக ஹீரோ - வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து வருரும் நடிகர் சரத்குமார் இந்த 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடப்படும் கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் 2023ம் ஆண்டில் தொடக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வாரிசு திரைப்படத்தில் நடித்த சரத் குமார் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த ருத்ரன் படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வெளிவந்த கஸ்டடி படத்தில் நடித்த சரத் குமார், இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். கடைசியாக சமீபத்தில் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் வெளிவந்த போர்த் தொழில் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த சரத்குமார் அவர்களின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. பக்கா க்ரைம் த்ரில்லர் படமாக வெளிவந்த போர்த் தொழில் திரைப்படம் இந்த 2023ம் ஆண்டின் மிக முக்கிய படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களின் நடிப்பில் வரிசையாக அட்டகாசமான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. முன்னதாக நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து கிரிமினல், துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து நிறங்கள் மூன்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் தனது 150வது திரைப்படமாக உருவாகும் தி ஸ்மைல் மேன் திரைப்படத்திலும் , தொடர்ந்து ஆழி என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் சரத்குமார் நடிப்பில் அடுத்த முக்கிய படமாக வரவிருக்கும் படம் தான் பரம்பொருள். வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்த நடிகர் அமிதாஷ் உடன் இணைந்து சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் பரம்பொருள் படத்தில் காஷ்மிரா பரதேசி கதாநாயகியாக நடித்திருக்கிறார். மனோஜ் மற்றும் கிரிஷ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த பரம்பொருள் திரைப்படத்தை இயக்குனர் C.அரவிந்த்ராஜ் எழுதி இயக்கியுள்ளார். S.பாண்டி குமார் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பு செய்திருக்கும் பரம்பொருள் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். சிலை கடத்தலை மையப்படுத்திய கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கும் இந்தப் பரம்பொருள் திரைப்படத்தின் முதல் பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் விரைவில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் போர் தொழில் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ரசிகர்களை கவர்ந்த சரத்குமார் இந்த பரம்பொருள் திரைப்படத்திலும் மிரட்டரான காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. இந்த நிலையில் பரம்பொருள் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளிவந்த ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதிரடியான ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான த்ரில்லர் என பக்கா ட்ரீட்டாக சிலை கடத்தலை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் விறுவிறுப்பான பரம்பொருள் படத்தின் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

கராத்தேவில் அசத்திய இறுதிச்சுற்று & ஓ மை கடவுளே நாயகி ரித்திகா சிங்... புகைப்படங்கள், வீடியோ & விவரம் உள்ளே!
சினிமா

கராத்தேவில் அசத்திய இறுதிச்சுற்று & ஓ மை கடவுளே நாயகி ரித்திகா சிங்... புகைப்படங்கள், வீடியோ & விவரம் உள்ளே!

மாவீரன் முதல் தண்டட்டி வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ!
சினிமா

மாவீரன் முதல் தண்டட்டி வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ!

‘நல்ல திரைப்படம் சமூகத்தில் உரையாடலை நிகழ்த்த வேண்டும்!’- 50நாட்களைக் கடந்த அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்… Dஇமானின் அறிக்கை இதோ!
சினிமா

‘நல்ல திரைப்படம் சமூகத்தில் உரையாடலை நிகழ்த்த வேண்டும்!’- 50நாட்களைக் கடந்த அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்… Dஇமானின் அறிக்கை இதோ!