என்ஜாய் என்ஜாமி சர்ச்சைக்கு விளக்கமளித்து சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட அறிக்கை!
By Anand S | Galatta | August 01, 2022 16:23 PM IST
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த ஆண்டில் (2021), இதுவரை வெளிவந்த மகான், கடைசி விவசாயி, குலுகுலு ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து நாய் சேகர் ரிட்டன்ஸ், பபூன், அனல் மேலே பனித்துளி ஆகிய திரைப்படங்கள் சந்தோஷ் நாராயணன் இசையில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.
தமிழ் மட்டுமல்லாது தற்போது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் தசரா தெலுங்கு படத்திற்கும், மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு மற்றும் அன்வேஷிப்பின் கண்டெத்தும் ஆகிய படங்களுக்கும் இசை அமைக்கிறார்.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் நாராயணன், பாடகி தீ மற்றும் "தெருக்குரல்" அறிவு மூவரும் இணைந்து உருவாக்கிய என்ஜாய் என்ஜாமி பாடல் வெளிவந்து உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் ஆகியோர் இப்பாடலை தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் இந்திய பிரதமர் அவர்களின் முன்னிலையில் அரங்கேற்றினர்.
இந்த நிகழ்வில் என்ஜாய் என்ஜாமி பாடலின் முக்கிய அங்கமாக விளங்கிய "தெருக்குரல்" அறிவு இல்லாதது பலருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்ததோடு நிறைய சர்ச்சைகளை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து இந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் "தெருக்குரல்" அறிவு தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நீங்கள் உறங்கும் பொழுது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரித்துக் கொள்ளலாம் விழித்திருக்கும்போது ஒன்றும் நடக்காது. ஜெய்பீம்… இறுதியில் உண்மையே வெல்லும்" என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
"தெருக்குரல்" அறிவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் விளக்கமளிக்கும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் நீண்ட முழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மேற்கொண்டு இதுகுறித்து தனிப்பட்ட முறையில் விளக்கமளிக்க எப்போதும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் அந்த முழு அறிக்கை இதோ…
— Santhosh Narayanan (@Music_Santhosh) August 1, 2022