தெலுங்கு சினிமாவில் நடிகராக ரசிகர்களிடையே பிரபலமடைந்து யாருடா மகேஷ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சந்தீப் கிஷன், முதல் படமாக இயக்கிய மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் சந்தீப் கிஷன் நடித்துள்ளார்.
அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அதிரடியான பீரியட் படமாக தயாராகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் மைக்கேல்.
அதிரடி ஆக்ஷன் ப்ளாக் திரைப்படமாக தயாராகியுள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கௌஷிக் மற்றும் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிரண் கௌசிக் ஒளிப்பதிவில், R.சத்ய நாராயணன் படத்தொகுப்பு செய்யும் மைக்கேல் படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கரண் C ப்ரொடக்சன் இணைந்து தயாரிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் மைக்கேல் திரைப்படம் வருகிற தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய நடிகர் சந்தீப் கிஷனிடம், "இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படம் தொடங்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே நிறைவடைந்து நிலையில், சமூக வலைதளவில் படம் குறித்து அதிகமாக பல செய்திகள் பரவி வருகின்றன." என பேசும் போது, "தளபதி 67 படத்தின் பூஜைக்கே நான் போயிருந்தேன்" என சந்தீப் கிருஷ்ணன் பதிலளித்தார். இதனை அடுத்து. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இது மாதிரி LCU-வில் அடுத்தடுத்த படங்கள் செய்யும் போது நாமும் இந்த யுனிவர்சில் தானே இருக்கிறோம். என நினைத்து நீங்களும் LCU-வில் இணைவது குறித்து லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் கேட்டிருக்கிறீர்களா? எனக் கேட்ட போது, "இல்லை நான் அப்படி கேட்டதே இல்லை… சொல்லப்போனால் விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது. அவரே தான் போன் செய்து சொன்னார். ஆனால் அவரே மீண்டும் அழைத்து வேண்டாம் மச்சான் சரியாக இருக்காது என்றார். அவர் என்னை மிகவும் பொறுப்புடன் பார்க்கிறார். அவரும் எதையும் திடீரென கேட்க மாட்டார் நானும் போய் கேட்டதில்லை. அவர் கேட்கவில்லை என்றால் நானும் கேட்க மாட்டேன் அது எங்களுக்குள் தெரியும்" என நடிகர் சந்தீப் கின் பதில் அளித்துள்ளார் இன்னும் பல சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்ட நடிகர் சந்தீப் கிஷனின் முழு பேட்டி இதோ…