இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படங்களில் ஒன்றாக வருகிற அக்டோபர் 19ஆம் தேதி தளபதி விஜயின் லியோ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் 2வது படமாக தயாராகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்கள் உடனான சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட லியோ திரைப்படத்தின் வசனகர்த்தாக்களான ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் லியோ திரைப்படம் குறித்து நம்மோடு பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் “பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் இடம் பல பேர் இருக்க கூடிய கேள்வி என்னவென்றால், “பெண் கதாபாத்திரங்களுக்கு உங்கள் படங்களில் அவ்வளவு வெயிட் இருப்பதில்லை?” நீங்கள் எவ்வளவு தூரம் சொல்லப் போகிறீர்கள் என்று தெரியவில்லை அந்த ஒரு குறையை சரி செய்வதற்காக தான் இதில் திரிஷா நடித்திருக்கிறாரா அல்லது இந்த கதாபாத்திரம் எந்த அளவிற்கு இருக்கும்?” என கேட்டபோது, “த்ரிஷா மேடம் உடைய கதாபாத்திரம் பொருத்தவரையில் என்ன சொல்வது சமமாக அதேசமயம் வலுவான ஒரு கதாபாத்திரமாக தான் லோகேஷ் கனகராஜ் வடிவமைத்திருக்கிறார். அதற்காகவே நாங்கள் சில விஷயங்களை செய்திருக்கிறோம்." என தீரஜ் வைத்தி பதிலளிக்க, தொடர்ந்து பேசிய இயக்குனர் ரத்னகுமார், “லோகேஷ் சொல்லும் போதே அந்த கதாபாத்திரம் மிகவும் திடமாக தான் இருந்தது” என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய தீரஜ் வைத்தி, “த்ரிஷா மேடம் உடைய கதாபாத்திரத்தை எழுதும் போது நாங்கள் இருவரும் கலந்து பேசி தான் எழுதினோம். ஏனென்றால் படத்தில் அவருடைய கதாபாத்திரமும் நடிப்பும் வெவ்வேறு லெவல்களில் இருக்கும். அது எங்குமே தவறாகி விடக்கூடாது அல்லவா? எனவே த்ரிஷா மேடம் உடைய கதாபாத்திரம் மிகவும் ஸ்ட்ராங்கான ஒரு கதாபாத்திரம் தான். அதே மாதிரி நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் ஒரு சீன் இருக்கிறது. ஒரு பவர்ஃபுல்லான சீன் இருக்கிறது. எனவே நிச்சயமாக இந்த படத்தில் இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே ஹீரோயின்கள் இப்படி தான் என்ற அந்த இமேஜை இந்த படம் மாற்றி விடும். இந்த படத்தில் ஹீரோயினும் மிக முக்கிய, ஹீரோவுக்கு சமமான ஒரு கதாபாத்திரத்தை தாங்கி இருக்கிறார்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட அந்த சிறப்பு பேட்டி இதோ…