நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டே இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் பத்து நாட்கள் கூட இல்லை. மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோer கேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படம் மிரட்டலான ஆக்சன் பிளாக் திரைப்படமாக இருக்கும் என்பது அதன் ட்ரைலரிலேயே தெரிகிறது. தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுராக் கஷ்யப், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையில் ஏற்கனவே வெளிவந்த இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் மூன்றாவது பாடல் வெகு விரைவில் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் திரைக்கதை வசனங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி இருவரும் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தளபதி விஜயின் லியோ திரைப்படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் வித்தியாசமான ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டரின் கதாபாத்திரம் குறித்து கேட்டபோது, அதற்கு பதிலளித்த தீரஜ் வைத்தி, “நான் சாண்டி மாஸ்டரை முதல் முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த போதே, ஆள் கொஞ்சம் முடி எல்லாம் முன்னால் வைத்துக் கொண்டு வாயெல்லாம் ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அந்த கதாபாத்திரத்தை ஒரு பக்கத்தில் அடக்கி விட முடியாது. அந்த கதாபாத்திரத்தை பொருத்தவரையில் அவனுக்கே தெரியாது அவன் எப்படிப்பட்ட ஒரு ஆள் என்பது.. ஒரு சில கதாபாத்திரங்களை எல்லாம் இவன் இவ்வளவு தான் பண்ணுவான் என நமக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அல்லவா? இவன் இப்படித்தான் இவனிடம் பார்த்து இருந்து கொள்ளுங்கள் என யாரிடமாவது சொன்னால் என்ன பண்ணிடப் போகிறார் பெரிதாக என்பார்கள் ஆனால், பார்த்தால் அவன் நினைத்ததை விட பெரியதாக ஏதாவது செய்வான். இந்த கேரக்டரை ஒரு விஷயத்திற்குள் அடக்க முடியாது. அவனால் எதுவும் செய்ய முடியும். அதை அவர் செய்தது நன்றாக இருக்கிறது. நன்றாக உள்வாங்கி நடித்திருக்கிறார். நான் எழுதும்போதே இந்த கதாபாத்திரம் சாண்டி மாஸ்டர் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். எனவே நாங்கள் எல்லோரும் பேசி நீங்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என அவரிடம் பேசி அவரை ஏற்றுக் கொள்ள வைத்து நடிக்க வைத்தோம். அது கொஞ்சம் புதுசாக இருக்கும் பிக்பாஸில் பார்த்த ஜாலியான சாண்டி மாஸ்டர் இதில் இருக்க மாட்டார்.” என்றார். தொடர்ந்து பேசிய இயக்குனர் ரத்னகுமார், “இந்த படத்திற்குப் பிறகு யாராவது சாண்டி மாஸ்டரிடம் இந்த கேரக்டர் நீங்கள்தான் என கேட்டால் இல்லை நான் இல்லை என அவர் சொல்வதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்தார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தியின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.