விஷாலின் அயோக்யா படத்தின் தற்போதைய நிலை !
By Aravind Selvam | Galatta | March 24, 2019 17:13 PM IST
விஷால் தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் அயோக்யா படத்தில் நடித்து வருகிறார்.இது தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
ராஷி கண்ணா இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.பார்த்திபன்,கே.எஸ்.ரவிக்குமார்,சோனியா அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த படத்தின் நாயகி ராஷி கண்ணா இந்த படத்தில் தன்னுடைய காட்சிகளை முடித்துவிட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த படம் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
And it’s a wrap for #Ayogya
— Raashi Khanna (@RaashiKhanna) March 24, 2019
Worked with such a wonderful team and made some great memories! Looking forward to you guys watching it soon.. 😊@ivenkatmohan @VishalKOfficial @TagoreMadhu pic.twitter.com/UeE3jPk6XZ