ஜி.வி.பிரகாஷை பாராட்டிய பழம்பெரும் ஒளிப்பதிவாளர் !
By Sakthi Priyan | Galatta | November 15, 2018 11:59 AM IST
இளைஞர்களின் சென்சேஷன் என கூறப்படும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாளமயம் என்ற திரைப்படம் திரைக்கு வெளிவரும் முன்னரே 31-வது டோக்கியோ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
மைண்ட் ஸ்க்ரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மேலும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய கடைசி வரிகள் இப்படத்தில் தான். பீட்டர் என்ற கதாப்பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தி கொண்ட ராஜிவ்மேனன் இப்படத்தில் லைவ்-சின்க் சவுண்ட் ரெகார்டிங் என்ற தொழில்நுட்ப காரணியை வைத்து இயக்கிருக்கிறார். இதற்க்கு முன்பு ஹேராம் மற்றும் ஆயுத எழுத்து போன்ற படங்களில் இந்த லைவ்-சின்க் ரெகார்டிங் முறை பயன்படுத்தப்பட்டது என்பது கூடுதல் தகவல்.
தற்போது இப்படத்தை பார்த்து விட்டு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், சுவாரஸ்யமான படம். இசையார்வம் உள்ளவரின் வாழ்க்கையை கூறும் விதமாக இருந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் படக்குழுவினரை பாராட்டி ட்வீட் பதிவிட்டிருக்கிறார்.
#SarvamThaalaMayam
— pcsreeram (@pcsreeram) November 15, 2018
An interesting film about mans
passion for music.Great perfomance by Gvprakash& Needumudivenu. Best wishes to rajeevmenon & team.