சாத்தான்குளம் சம்பவம்: அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் - ரஜினி அறிக்கை !
By Aravind Selvam | Galatta | July 01, 2020 12:46 PM IST
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்ததாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.அவர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த லாக்கப் டெத் சம்பவத்தை தமிழகத்தில் பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.போலீசார் தங்கள் பதவியை பயன்படுத்தி அப்பாவிகளை துன்பப்படுத்தும் இதுபோன்ற செயல்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.தமிழகத்தில் பல இடங்களில் இது குறித்து போராட்டங்கள்,சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த வழக்கில் உடனடி தீர்வு வேண்டும் சம்மந்தப்பட்ட நபர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.மேலும் தங்கள் வாழக்கையில் போலீசால் நடந்த சில கசப்பான சம்பவங்களையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.இந்த வழக்கு CBIக்கு மாற்றப்பட்டு வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த பிரச்சனையே இன்னும் ஓயாத நிலையில் ,இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதியை சில காவலர்கள் மிரட்டிய விவரகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தற்போது ரஜினிகாந்த் ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் தந்தையையும்,மகனையும் மிருகத்தனமாய் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும் ,காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும்,பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும்.விடக்கூடாது, சத்தியமா விடவே கூடாது என்று தனது ஆத்திரத்தை இந்த அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன் ஜெயராஜின் குடும்பத்தினரை நேரடியாக போனில் அழைத்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020
"Sathiyama Vidave Koodadhu", Rajinikanth breaks silence | Sathankulam Incident
01/07/2020 12:29 PM
Vetri Maaran tweets after a long gap of 2 years - fans surprised!
01/07/2020 10:00 AM
Theatre owners reveal what's happening inside theatres during lockdown!
30/06/2020 09:27 PM