உலகளவில் இந்திய திரைப்படம் சமீப காலமாக  கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய படங்களும் இந்திய கலைஞர்களும் உலகளாவிய மேடைகளை அலங்கரித்து வருகின்றனர்.  முன்னதாக எத்தனை நாள் ஒரு படம் போகிறது என்று கணக்கு வைத்தனர். பின்பு எவ்வளவு வசூல் என்று கணக்கு வைத்தனர். அதன் பின் எத்தனை விருதுகள் பெறுகின்றன என்பதில் கணக்கு வைத்தனர். அதன்பின் என்ன விருது என்றே மக்களின் பார்வை நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த நான்கு பிரிவுகளிலும் ஒரு படம் தன்னை நிருபித்து கொண்டே இருக்கின்றது என்பது கவனிக்கதக்கது

கடந்த ஆண்டு மார்ச் 24 ம் தேதி திரைக்கு வந்து உலகளவில் மக்களை ஈர்த்த படம் ராஜமௌலியின்  ஆர்.ஆர்.ஆர். பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்த ராஜமௌலி. அசத்தலான தொழில்நுட்ப குழுவுடன் களம் இறங்கிய ராஜமௌலியும் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத்தும் ஆர்.ஆர்.ஆர் படத்தை செதுக்க தொடங்கினார். பிரிட்டிஷ் எதிர்த்து இந்தியாவின் சுதந்திர போராட்ட காலத்தின் அடிப்படையில் இரண்டு தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கதையுடன் உருவாக்க படமாக திரைக்கு வெளிவந்து வெகுவாக மக்களை கவர்ந்தது.

ஏற்கனவே ‘பாகுபலி’ மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்த ராஜமௌலி கூடுதல் மசாலாக்களை நேர்த்தியாக பயன்படுத்தி வரவேற்பை பெற்றிருப்பார். 500 கோடியில் உருவான இந்த படம் உலகளவில் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து ஒட்டுமொத்த திரையுலகினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நிறைவடைய போகும் தருணத்திலும் இன்னும் உலகின் பல இடங்களில் திரையிடபட்டு வருகிறது. மேலும் இந்த படம் மேல்நாட்டு விருதுகள் பெற்றும் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டும் வருகிறது.  இந்நிலையில் ஆஸ்கார் 2023 விருது விழாவில் 14 பிரிவுகளில் ஆர் ஆர் ஆர் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் கோல்டன் குலோப் விருது விழாவிற்கும் இரண்டு பிரிவுகளில் இந்த படம் சமர்பிக்கபட்டுள்ளது.

உலகம் முழுதும் ஓடிக் கொண்டிருக்கும் ஆர்ஆர் ஆர் வரும் ஜனவரி 9 அன்று உலகின் மிகப்பெரிய IMAX திரையான அமேரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் சீன திரையங்கில் திரையிடப்படுகின்றது. எந்த இந்திய படத்திற்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரையிடலுக்கான டிக்கெட்டுகள் வெறும் 98 நொடிகளில் விற்று தீர்ந்தன என்ற செய்தியை ‘பியாண்ட் ஃபெஸ்ட்’ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

அதில், “வராலாற்று சிறப்புமிக்க இந்த செய்தி அதிகாரபூர்வமானது மற்றும் சிறப்புமிக்கது. உலகின் மிகப்பெரிய IMAX திரையான லாஸ் ஏஞ்சல்ஸ் சீன திரையரங்கில்  திரையிடப்படவுள்ள RRR திரைப்பட டிக்கெட்டுகள் 98 நொடிகளில் விற்று தீர்ந்தன. இதற்கு முன் எந்த இந்திய திரைப்படத்திற்கும் இங்கு திரையிடல் இல்லை. ஏனென்றால் இதற்கு முன்பு இது போல் படம் வரவில்லை.” என்று குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

 

It's official and it's historic. @RRRMovie sold out the @ChineseTheatres @IMAX in 98 seconds. There has never been a screening like this of an Indian film before because there has never been a film like RRR before. Thank you @ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @mmkeeravaani pic.twitter.com/GjR0s6A6b1

— Beyond Fest (@BeyondFest) January 4, 2023

 

இதனையடுத்து இந்திய திரையுலகம் மற்றும் ரசிகர்கள் ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர். பலர் இந்த செய்தியை வைரலாக்கி வருகின்றனர். மேலும் இந்த செய்தியை  பகிர்ந்து அதனுடன்,

92 நொடிகள்... 932 டிக்கெட்டுகள்...விற்பனையாகியது” என்று குறிப்பிட்டு உள்ளனர்.

 

98 seconds… 932 Tickets… SOLD OUT!! #RRRMovie

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 https://t.co/MpoYbPFH4K

— RRR Movie (@RRRMovie) January 5, 2023

 

ஜனவரி 11 அன்று நடைபெறவுள்ள கோல்டன் குளோப்ஸ் 2023 ல் இரண்டு பரிந்துரைகளில் RRR இடம்பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக இந்த திரையிடலில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர்  ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் மற்றும் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தொடர்ந்து படக்குழுவினருக்கும் இயக்குனர் ராஜமௌலிக்கும் நடிகர் ராம் சரண் மற்றும்  ஜூனியர் என்டிஆர் க்கும் இசையமைப்பாளர் கீரவாணிக்கும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளது.