தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதரித்து அசத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலின்.அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலிலும் தனது முத்திரையை பதித்து 2021-ல் நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று MLA-வாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் கடைசியாக நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கடந்த சில வருடங்களாக அரசியலில் செம பிஸியாக இருந்தாலும் படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து செய்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.இதனை தொடர்ந்து கண்ணை நம்பாதே,மாமன்னன்,கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

தயாரிப்பாளராக பல தரமான படைப்புக்களை  விநியோகம் செய்தும் வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் பல வெற்றிப்படங்களின் அங்கமாக இருந்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தினை தயாரிப்பதாக கமல் ரெட் ஜெயண்ட் 15 ஆண்டுகள் விழாவில் அறிவித்தார்.

இந்த படத்தின் இயக்குனர் மற்றும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகும் 54ஆவது படமான இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்றை கமல் வெளியிட்டுள்ளார்.இந்த அறிவிப்பு வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்