ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகராக தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தளபதி விஜய்யின் லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து நாளுக்கு நாள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் பக்கா ஆக்சன் ட்ரீட்டாக லியோ திரைப்படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகன் கதாநாயகியாக சேர்ந்திருக்கும் தளபதி விஜய் மற்றும் திரிஷாவுடன் இணைந்து சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மரியான், அபிராமி வெங்கடாசலம், ஜாஃபர் சாதிக், மாயா கிருஷ்ணன், சாந்தி மாயாதேவி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் ஒருவரான தயாரிப்பாளர் T.சிவா அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய போது பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தொடர்ந்து அவரிடம் பேசும் போது, “நீங்கள் சொல்லுங்கள் சார் தோராயமாக லியோ படம் இவ்வளவு வசூல் செய்யும் என சொல்லுங்கள்? எனக் கேட்டபோது, “முதலில் 75 கோடிகள் பிறகு 80 பிறகு 90 - 95 விக்ரம் இவ்வளவு வசூல் செய்ததா..? அதன் பிறகு பொன்னியின் செல்வன் 102 கோடி வசூல் செய்ததா அதன் பிறகு ரஜினி சார் அதை தாண்டிவிட்டாரா? அப்படி என்றால் அவர் தான். சூப்பர் ஸ்டார் என்றால் சூப்பர் ஸ்டார் தான். எப்போதுமே சூப்பர் ஸ்டார் என்பது சூப்பர் ஸ்டார் அவர்கள் மட்டும் தான். அந்த வகையில் இந்த லியோ படம் கொடுக்கக்கூடிய லாபமும் இந்த படத்தின் மீதான மிகப் பெரிய எதிர்பார்ப்பும் இந்த படம் ரிலீஸ் ஆகப்போகிற அந்த தேதியும் சரியாக விடுமுறை தினங்களை குறி வைத்து வருவதனால் நிச்சயமாக முதல் நாளில் 100 கோடியை இது தாண்டி விடும் என்று நான் நம்புகிறேன். அதற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இது நடந்தாக வேண்டும். எல்லா படங்களும் ஓட வேண்டும் நிறைய படங்கள் ஓட ஓட தான் இந்த சினிமாவுக்குள் மீண்டும் ஏதாவது செய்ய முடியும். எனவே லியோ கட்டாயம் 100 கோடியை தாண்டி விடும். நிச்சயமாக லியோ ஒரு பெரிய படமாக இருக்கும் கமர்சியலாக எந்த குறையும் இல்லாமல் இருக்கும்." என தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் T.சிவா அவர்கள் பேசிய அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.