இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகியான நடிகை பிரியங்கா சோப்ரா தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகியாக திகழ்கிறார்.

இந்திய நடிகையாக மட்டுமல்லாமல் ஹாலிவுட் திரையுலகிலும் கொடிகட்டிப் பறக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா உலக அளவில் மிகப் பிரபலமான தி மேட்ரிக்ஸ் சீரிஸ் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளிவந்த தி மேட்ரிக்ஸ் ரிசர்ரக்ஷன்ஸ் திரைப்டத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பாலிவுட்டில் கடைசியாக பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த தி வொய்ட் டைகர் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே பிரபல பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோன்ஸை நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தாயாகி உள்ளார். வாடகை தாய் மூலமாக பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதியினர் குழந்தை பெற்றுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வாடகை தாய் மூலமாக நாங்கள் குழந்தை பெற்றதில் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம். இந்த முக்கியமான தருணத்தில் எங்கள் குடும்பத்தோடு நாங்கள் தனிமையில் இருக்க விரும்புகிறோம். அனைவருக்கும் நன்றி!” என தெரிவித்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் தம்பதியினருக்கு ரசிகர்களும் திரை உலகமும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)