பிரபல தமிழ் நடிகர்-ஆடை வடிவமைப்பாளருக்கு திருமணம்!
By Anand S | Galatta | March 14, 2022 17:18 PM IST
தமிழ் திரை உலகின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களில் முக்கியமானவர் NJ.சத்யா. இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா நசீம், ஜெய் ஆகியோர் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ராஜாராணி திரைப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள NJ.சத்யா நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்து வெளிவந்த மான் கராத்தே திரைப்படத்திற்கும் ஆடை வடிவமைப்பு செய்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த பைரவா மற்றும் இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து மெகா ஹிட்டான தெறி ஆகிய திரைப்படங்களிலும் தளபதி விஜய்யின் ஆடை வடிவமைப்பாளராக NJ.சத்யா பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆடை வடிவமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இயக்குனர் சசிகுமார் கதாநாயகனாக நடித்த கிடாரி மற்றும் வெற்றிவேல் ஆகிய படங்களில் நடித்துள்ள சத்யா ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்த கனா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஆடை வடிவமைப்பாளர் நடிகருமான NJ.சத்யா அவருக்கு கோவையில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் இன்று (மார்ச் 14ஆம் தேதி) திருமணம் நடைபெற்றுள்ளது. உறவினர்கள் நண்பர்கள் சூழ நடைபெற்ற திருமணத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் முன்நின்று மணமக்களை வாழ்த்தினார். வருகிற மார்ச் 20ஆம் தேதி NJ.சத்யாவின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் இல்லறம் இனிதே தொடர வாழ்த்துகிறேன்
— M.Sasikumar (@SasikumarDir) March 14, 2022
Wish you a Happy Married Life @NjSatz #gokila 🎉 pic.twitter.com/IdNXVTVDgT