வைரலாகும் பொன்னியின் செல்வன் புது மேக்கிங் கிளிம்ப்ஸ் !
By Aravind Selvam | Galatta | August 08, 2022 14:28 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.தனது படங்கள் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கியுள்ளார் மணி ரத்னம்.இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.சீயான் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 2022-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி னால வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் புது மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ஆபரணங்கள் குறித்த இந்த வீடியோவில் சில மேக்கிங் ஷாட்களும் உள்ளன.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
All that glitters is gold! Glad to have @KishanDasandCo as our jewellery sponsors for #PS1 !
— Lyca Productions (@LycaProductions) August 8, 2022
In theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! #ManiRatnam #ARRahman #PonniyinSelvan @madrastalkies_ @arrahman @tipsofficial @primevideoin pic.twitter.com/htSn2bnjce