வந்தியத்தேவனாக வெயிட்டு காட்டும் கார்த்தி...பொன்னியின் செல்வன் படத்தின் புது போஸ்டர் !
By Aravind Selvam | Galatta | July 05, 2022 12:11 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.தனது படங்கள் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கியுள்ளார் மணி ரத்னம்.
இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.
சீயான் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 2022-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்த படத்தின் டீஸர் வெகு விரைவில் வெளியாகவுள்ளது,இந்த படத்தில் விக்ரமின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் கார்த்தியின் புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.அசத்தலான லுக்கில் வந்தியத்தேவனாக கார்த்தி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்
The Prince without a kingdom, the spy, the swashbuckling adventurer...here comes Vanthiyathevan! #PS1 🗡 @LycaProductions #ManiRatnam pic.twitter.com/bitFUgGU5O
— Madras Talkies (@MadrasTalkies_) July 5, 2022