இரவின் நிழல் பட ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
By Anand S | Galatta | May 04, 2022 11:37 AM IST
கலையின் மீது இருக்கும் அதீத காதலால் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை கையாண்டு சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் அடுத்த உலக சாதனை முயற்சியாக உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக நான் லீனியர் சிங்கிள் ஷாட் (Non Linear Single Shot Movie) திரைப்படமாக தயாராகியுள்ளது இரவின் நிழல் திரைப்படம்.
இரவின் நிழல் திரைப்படத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரவின் நிழல் திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.
திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களின் யோசனைகளுக்கு அப்பாற்பட்டு இயக்குனர் பார்த்திபனின் அசாத்திய சிந்தனையில் உருவாகி இருக்கும் இரவின் நிழல் படத்திற்கு ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக சில தினங்களுக்கு முன் வெளிவந்த இரவின் நிழல் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விரைவில் ரிலீஸாகவுள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் ரிலீஸ் உரிமத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் வெளியிடவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தனக்கே உரித்தான பாணியில் இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகும் இயக்குனர் பார்த்திபனின் பதிவு இதோ…
ஓடி ஜெயிக்கும் முன்-நான்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 3, 2022
புதிய பாதைக்காக ஓடும் போதே விசிலடித்து உற்சாகப்படுத்தியவர் தாணு அவர்கள்!அவர்கள் இன்றும் என் IN-க்கு உற்சவர் ஆவது… அவரது பாஷையில் “இந்த நாள் இனிய நாள்!!!@theVcreations @arrahman @shreyagoshal @varusarath5 @GenauRanjith @RVijaimurugan @ArthurWisonA pic.twitter.com/u9aBVYT5DV