அதிர வைத்த நாங்குநேரி சம்பவம்.. வெகுண்டெழும் திரைபிரபலங்கள்.. விவரம் உள்ளே...

நாங்குநேரி சம்பத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் பிரபலங்கள் - Tamil celebrities react to Nanguneri incident tweets goes viral | Galatta

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதிக்குட்பட்ட பெருந்தெருவில் வசித்து வரும் சின்னதுரை என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரி சந்திர செல்வி ஆகியோரை இரண்டு நாட்கள் முன்பு அடையாளம் தெரியாத சிலர் வீடு புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சின்னதுரை மற்றும் அவரது சகோதரியை அக்கம் பக்கத்தினர் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அவசர பிரிவு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சின்னதுரை தாத்தா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர வைத்துள்ளது. அதன்பின் போலீஸ் விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் தற்போது கைது செய்யப் பட்டுள்ளனர். அதில் மூவர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் விசாரணையில் சின்னதுரை படித்து வரும் பள்ளியில் சக மாணவர்கள் சாதியை வைத்து இழிவு படுத்தியதாகவும் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்ததுள்ளார். இதன் பின்னணியில் பழிவாங்கும் நோக்கில் சின்னதுரையையும் அவரது சகோதரியையும் சரமாரியாக வெட்டியுள்ளது 6 பேர் கொண்ட கும்பல். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. மேலும் இது குறித்து மிகப்பெரிய அளவு எதிர்ப்புகளும் கண்டங்களும் எழ இந்த செய்தியறிந்து பலர் கொதித்தெழுந்துள்ளனர். இதையடுத்து பொது மக்களுடன் இணைந்து பல திரை பிரபலங்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார்

"தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்.. “ என்று அவரது சமூக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்🙏 சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்

— G.V.Prakash Kumar (@gvprakash) August 11, 2023

மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த சம்பவம் குறித்து அவரது வலைதள பக்கத்தில்,

“கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்… pic.twitter.com/XCxkZdJgdv

— Mari Selvaraj (@mari_selvaraj) August 11, 2023

பா.ரஞ்சித்

இயக்குனர் பா ரஞ்சித் இது குறித்து.  “சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு…

— pa.ranjith (@beemji) August 11, 2023

சமுத்திரகனி

“சாதி வெறி…. மண்ணோடு மண்ணாகட்டும்…” என்று இச்சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார்.

சாதி வெறி…. மண்ணோடு மண்ணாகட்டும்…. pic.twitter.com/fIeC02Gx5l

— P.samuthirakani (@thondankani) August 12, 2023

இயக்குனர் லெனின் பாரதி

“ஆண்டபரம்பரை… வீரப்பரம்பரை…தீரப்பரம்பரை… நான் மேல… நீ கீழ.. என போலிப் பெருமைங்க பேசிப் பேசி.. பிஞ்சுங்க மனசிலும் நஞ்சை விதைச்சு… எப்பத்தாண்டா அடங்கும் உங்கள் இரத்தவெறி பிடிச்சுப் புளுத்துப்போன பெருமை மயிருங்கலாம்…”  என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டபரம்பரை… வீரப்பரம்பரை…தீரப்பரம்பரை…
நான் மேல… நீ கீழ.. என போலிப் பெருமைங்க பேசிப் பேசி.. பிஞ்சுங்க மனசிலும் நஞ்சை விதைச்சு… எப்பத்தாண்டா அடங்கும் உங்கள் இரத்தவெறி பிடிச்சுப் புளுத்துப்போன பெருமை மயிருங்கலாம்… #சாதிவெறி #நாங்குநேரி pic.twitter.com/DXljfh6c8J

— leninbharathi (@leninbharathi1) August 11, 2023

 

கார்த்திக் சுப்பராஜ்

கொடூரமான அவமானதிற்குட்பட்ட சாதி வெறியாட்டம் நாங்குநேரி சம்பவம்..

 

Horrible Shameless Pathetic Casteists #நாங்குநேரி #Nanguneri incident 💔💔

— karthik subbaraj (@karthiksubbaraj) August 12, 2023