மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் மீடியாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் நிஹாரிகா.இதனை தொடர்ந்து ரம்யாகிருஷ்ணன் நடித்த வம்சம் தொடரில் நடித்து சீரியல் நடிகையாக அறிமுகமானார்.தெலுங்கிலும் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார் நிஹாரிகா.

இதனை அடுத்து படங்களில் அறிமுகமான இவர் சக்கபோடு போடு ராஜா,எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட படஙகளில் முக்கிய வேடத்தில் நடித்தார்,இவற்றை தவிர வட்டம்,உன்னால் என்னால்,எவனும் புத்தனில்லை போன்ற படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார் நிஹாரிகா.

ராஜா ராணி சீசன் 2வில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் நிஹாரிகா,அடுத்ததாக வேலைக்காரன் தொடரிலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்தார்,இவற்றை தவிர ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கிய வித்யா நம்பர் 1 தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான வேலைக்காரன் தொடரில் இருந்து சில காரணங்களால் விலகியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் லைவில் தெரிவித்துள்ளார்.இவர் விலகியது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.