அன்றும் இன்றும் என்றும் என மக்களின் மனம் கவர்ந்த நட்சத்திரமாக கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஸ்டைலால் ரசிகர்களை கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற தவறிய போது ஆனாலும் அடுத்தடுத்து அவரது நடிப்பில் தயாராகும் படங்கள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில், தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அடுத்ததாக மீண்டும் லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதனிடை
தொடர்ந்து இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முதல்முறையாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, மிர்னா மேனன், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய இடங்களில் நடிக்க, மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் விநாயகன் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும் மோகன்லால் சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் அட்டகாசமான கௌரவ வேடங்களில் அசத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகிள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான பக்கா மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக ஜெயிலில் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குனர் நெல்சன் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் பேசியபோது, “எனக்கு சாருடைய அண்ணாமலை மற்றும் பாட்ஷா தான் ஃபேவரட். நான் பார்க்கும் போது அது தருணத்தில் ரஜினி என்ற போது ஒரு விஷயம் இருக்கும் அல்லவா? அது எப்படியாவது இந்த படத்தில் வந்து விட வேண்டும் என்பது தான் என்னுடைய அடித்தளமாக இருந்தது. அதை வைத்து தான் ஒரு கதை செய்து.. இதெல்லாம் இருக்கிற மாதிரி தான் ஒரு கதை இருக்க வேண்டும் என செய்து அதை இப்போது தியேட்டரில் பார்க்கும் போது, இன்டெர்வல் காட்சி, ப்ரீ-கிளைமாக்ஸ், கிளைமாக்ஸ் என பார்க்கும்போது என நிறைய ரஜினி சார் அவர்களது தருணங்கள் இருக்கிறது. அப்படி ஒரு ரஜினியிசம் நீங்கள் ஃபீல் செய்ய வேண்டும் என்றால், இந்தப் படம் அப்படியாக இருக்கிறது என மற்றவர்கள் சொல்லும்போது கேட்க, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது." என இயக்குனர் நெல்சன் தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் நெல்சனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.