திரையரங்குகளில் வெற்றிகரமாக ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் வெளியான இப்படம் தற்போது இந்தியா முழுவதும் ரசிகர்களின் பெரும் கொண்டாட்டத்துடன் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படம் மிகப்பெரிய சென்றடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார் என்று பல காரணம் இருந்தாலும் படம் வெளியாகும் முன்னரே ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேச வைத்ததன் காரணம் இப்படத்தில் அனிருத் இசையில் அமைந்துள்ள ‘காவாலா’ பாடல்..
தமன்னாவின் அசத்தலான நடனத்துடன் உருவான இப்பாடல் அனிருத் இசையில் ஷில்பா ராவ் பாடியுள்ளார். மேலும் இப்பாடலை பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.காவாலா பாடல் வெளியான நாளிலிருந்து இன்று வரை இணையத்தில் டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது. இதுவரை யூடியூப் தளத்தில் 120 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. திரையரங்குகளிலும் இப்பாடல் ரசிகர்களை குதூகலத்தில் கொண்டாட வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்து கொண்டு திரையரங்குகளில் வெற்றிகராமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ஜெயிலர்’ படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் வெளியான நாளிலிருந்து இன்று வரை இணையத்தில் டிரெண்ட்டிங்கில் இருந்து வரும் காவாலா பாடல் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்தார். காவாலா பாடல் குறித்து நெல்சன் திலீப்குமார் பேசியதாவது,
"நாங்க எப்போதும் படத்திற்கு பாடல் என்பது விளம்பரத்திற்காக பிரிச்சி வெச்சிடுவோம். கோலமாவு ல கல்யாண வயசு, டாக்டர் ல செல்லம்மா, பீஸ்ட் ல அரபிக் குத்து.. அதுபோல தான் ஜெயிலர் ல காவாலா.. படத்திற்கும் அந்த பாடலுக்கு என்ன தொடர்பு இருக்குனு தெரியாது.. ஆனா அந்த பாட்டுலாம் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கு..
எவ்ளோதான் செலவு பண்ணி விளம்பரங்கள் பண்ணாலும் இந்த பாடல்களுக்கு கிடைக்குற விளம்பரம் போல் வராது...
கோலமாவு பண்ணும் போது அந்த பாட்டு ரசிகர்களிடம் இப்படி ஒரு படம் இருக்குனு காட்டதான் அந்த பாட்டு வெச்சோம். அதை எப்போதும் அனிருத்திடம் விட்டுவிடுவேன். படத்திற்கு சில பாடல்கள் தேவைபடும் அதை மட்டும் சரியா பண்ணிடுவோம். அந்த பாடல்களாம் இந்த பாடல்கள் மாதிரி ரீச் ஆகாது இருந்தாலும் அது படத்திற்கு தொடர்புடைய பாடல்களாக இருக்கும்.." என்றார் இயக்குனர் நெல்சன்.
மேலும் இயக்குனர் நெல்சன் அவர்கள் ஜெயிலர் திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ உள்ளே..