தேசிய திரைப்பட தினம் தேதி மாற்றம்! விவரம் உள்ளே
By Anand S | Galatta | September 13, 2022 23:00 PM IST
மனித இனம் உருவான காலத்திலிருந்து நாகரீகம், உணவு, உழைப்பு, பொழுதுபோக்கு போன்றவை பல பரிணாம வளர்ச்சிகளை கண்டுள்ளன. அந்தவகையில் மனித இனத்தின் இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக திகழ்வது சினிமா. இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
இந்திய மக்கள் சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இணைத்துப் பார்க்கிறார்கள். இங்கு சினிமா நட்சத்திரங்களை கடவுளுக்கு இணையாக கொண்டாடுகிறார்கள். கையடக்க செல்போனிலேயே நேரடியாக புது படத்தின் முதல் காட்சியை காணும் வசதி வந்துவிட்ட போதும் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆர்வம் இன்றளவும் குறையவில்லை.
திரை உலகுக்கு பெரும் பணியாற்றிய திரைக் கலைஞர்களை கொண்டாடும் அதே வேளையில் திரையுலகை தாங்கிப்பிடிக்கும் ரசிகர் பெருமக்களையும் மதிக்க வேண்டியது திரையுலகின் கடமை. அந்த வகையில் தேசிய திரைப்பட தினத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ரசிகர்களுக்கு குறைந்த விலையில் திரைப்பட டிக்கெட்டுகள் வழங்கவுள்ளதாக அறிவுப்புகள் வெளியானது.
வரும் செப்டம்பர் 16-ம் தேதியை தேசிய திரைப்பட தினமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவில் 4000-கும் மேற்பட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அன்று ஒரு நாள் திரைப்படத்தை பார்க்க வரும் அனைத்து ரசிகர்களுக்கும் 75 ரூபாயில் ஒரு டிக்கெட் வழங்க முடிவு செய்தனர். இந்நிலையில் தற்போது தேசிய திரைப்பட தினத்தின் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 16-ஆம் தேதிக்கு பதிலாக வரும் செப்டம்பர் 23-ம் தேதியை தேசிய திரைப்பட தினமாக கொண்டாட முடிவு செய்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை இதோ…
The National Cinema Day was previously announced to be held on 16th September, however, on request from various stake holders and in order to maximize participation, it would now be held on 23rd September #NationalCinemaDay2022 #Sep23 pic.twitter.com/c5DeDCYaMD
— Multiplex Association Of India (@MAofIndia) September 13, 2022