தி பேமிலி மேன் 2-அமேசான் தலைமை அதிகாரிக்கு சீமான் எச்சரிக்கை கடிதம்!!!
By Anand S | Galatta | June 06, 2021 19:26 PM IST
அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் பிரபலமான வெப் சீரிஸான தி பேமிலி மேன் வெற்றியைத் தொடர்ந்து, தி பேமிலி மேன் 2 தற்போது வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகரான மனோஜ் பஜ்பை நடிக்கும் தி பேமிலி மேன் 2-ல் நடிகைகள் சமந்தா, பிரியாமணி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இணைந்து எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு சச்சின் மற்றும் ஜிகர் இசை அமைத்துள்ளனர்.ஹிந்தி மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் கடந்த 4ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் வெளியானது.
முன்னதாக இதன் டிரைலர் வெளியான சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த வெப்சீரிஸில் முழுக்க முழுக்க தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழர்களை சீண்டும் நோக்கில் திட்டமிட்டு வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் , வீரமான தமிழீழப் போராட்டத்தை சேர்ந்தவர்களை கொச்சைப்படுத்தி தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டு காட்சி அமைக்கப்பட்டிருப்பதால் உலகெங்கும் உள்ள பல தமிழ் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பல எதிர்ப்புகளையும் மீறி இந்த வெப் சீரியஸ் கடந்த 4ஆம் தேதி வெளியாகி உள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமேசான் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் அபர்ணா புரோகித்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் உடனடியாக டீ பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் கோபப்படுவதை நிறுத்த வேண்டும் அப்படி நிறுத்தாவிட்டால் அனைத்து அமேசான் நிறுவன சேவைகளையும் உலகத் தமிழர்கள் அனைவரும் புறக்கணிப்போம் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
உலகெங்கும் பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள தி பேமிலி மேன் 2 வெப்சீரிஸ் இன்னும் அமேசான் பிரைம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதற்கு உலகின் பல பக்கங்களில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழும் நிலையில் தற்போது தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் மூலம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stop Streaming #TheFamilyMan2 web series, else we Thamizhs all over the world may have to lead a Massive Campaign to Boycott all @amazon Services, including Prime Video.https://t.co/eMCi1AqP8m@aparna1502 @PrimeVideoIN pic.twitter.com/czbSElgnM7
— சீமான் (@SeemanOfficial) June 6, 2021