தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சுப்ரமணியபுரம், நாணயம், பசங்க, ஈசன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் தொகுப்பாளராகவும் சன் டிவி மற்றும் விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், தொடர்ந்து சமூக வலைதளங்களில் இளையராஜா மீதான விமர்சனங்களை தெரிவிப்பதற்கான கோபமும் காரணமும் என்ன என கேட்டபோது,
“இசையமைப்பாளர் இளையராஜா தான் என்னுடைய குரு, அப்படி இருக்கும் போது யாராவது குருவை தவறாக கேவலமாக மரியாதை இல்லாமல் பேசுவார்களா? இல்லை நான் வெற்றியடைந்த ஒருவன் அப்படி சொல்லுவேனா? சொல்ல முடியுமா? எனக்கு இன்றைக்கு வரைக்கும் அவர்தான் குரு!! அவர் பாடல்களை இப்போது வரைக்கும் கேட்டு கற்றுக் கொண்டேன், வளர்ந்தேன் என்னுடைய அடையாளம், அங்கீகாரம் கிடைத்த வெற்றி எல்லாமே அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது. இளையராஜா என்ற தனி மனிதன் மீது எனக்கு காட்டமான விமர்சனம் உண்டு. இளையராஜா மாதிரி ஒரு மட்டமான மனிதரை பார்க்கவே முடியாது. அவர் ஒரு பெரிய இசையமைப்பாளர் அவருக்கு ஞானி என்றெல்லாம் பட்டம் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கெல்லாம் முழு தகுதியானவர். அவர் இசையை நான் விமர்சித்தால் தான்.. நான் வந்து என் குருவை எப்படி விமர்சிக்க முடியும் ஏனென்றால் கற்றுக் கொண்டதே அவரிடம் இருந்துதான். அவருடைய சில இசை கோர்வைகள் எனக்கு பிடிக்காமல் போகலாம். இளையராஜா அவர்களைப் பற்றி பெருமையாக பேச இப்போதும் நீங்கள் ஆரம்பித்தீர்கள் என்றால் அவருடைய பாடல்களைப் பற்றி மணிக்கணக்காக என்னால் பேச முடியும். ஆனால் ஒரு மனிதராக அவர் ரொம்ப மட்டமானவர். ஏனென்றால் கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லாமல் ஒரு சாதாரண ஆளாக இருந்தால் நாம் இவ்வளவு விமர்சிக்க வேண்டியது இல்லை. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சினிமா துறையில் அவரை சாமி என்று கூப்பிடுவார்கள் தெரியுமா? ரஜினி சார் கூட அவரை சாமி சாமி என்று கூப்பிடுவார். ஏனென்றால் அந்த அளவுக்கு ஆன்மீகத்திற்கு உள்ளே சென்றவர். ஆன்மீகத்திற்கு உள்ளே போகப் போக பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையும், ஏற்றுக் கொள்ளுதலும், புரிந்து கொள்ளுதலும் வந்தால் தானே அது ஆன்மீகம். இவர் ஆன்மீகத்திற்கு உள்ளே போகிறேன் என்று சொல்லி வெளியில் அசிங்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். உதாரணத்திற்கு இப்போது கூகுளுக்காக அமெரிக்கா சென்று ஒரு நிகழ்ச்சி நடத்தினார். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு, அந்த நிகழ்ச்சிகள் இசை சார்ந்த கேள்விகள் கேட்டதற்கு கூட கடைசியில் இயேசு கிறிஸ்துவை வந்து... கிறிஸ்தவம் எதில் நிற்கிறது தெரியுமா? இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் பிறந்தார்.. வாழ்ந்தார்.. சிலுவையில் இறந்தார்.. மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.. இதில் எதை மறுத்தாலும் கிறிஸ்துவமே கிடையாது. இவர் முட்டாள் மாதிரி போய் என்ன பேசுகிறார், "இயேசு கிறிஸ்து என்று ஒருவர் பிறந்தாரா இருந்தாரா வாழ்ந்தாரா இறந்தாரா திரும்ப உயிர்த்தெழுந்தாரா அதெல்லாம் எனக்கு தெரியாது" இதெல்லாம் அவருக்கு தேவையா? அவர் என்ன சொல்ல வருகிறாராம் ரமண மகரிஷி ஒருத்தர் தான் இறந்து உயிர்த்தெழுந்தார் என்கிறாராம். கொஞ்சமாவது ஆன்மீக முதிர்ச்சி இருப்பவர் புரிதல் இருப்பவர் எப்படி சொல்வார் மற்ற நம்பிக்கைகளில் பல விஷயங்கள் இருக்கிறது. அதைக் கூட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ரமண மகரிஷி ஒருவர் இறந்து உயிர்த்தெழுந்தார். அதுவே பொய்யென தற்போது நிரூபிக்கிறார்கள். அதை ஆவணப்படம் எடுத்த இயக்குனரே அதை தெரிவித்து இருக்கிறார். உண்மையிலேயே அவர் அப்படி உயிர்த்தெழுந்து வந்தார் என்றே வைத்துக் கொள்வோம் ஒரு பண்புள்ளவன் யாராவது இப்படி பேசுவானா கோடிக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா இயேசு கிறிஸ்துவை, அப்படி என்றால் அந்த மக்களை நாம் காயப்படுத்த வேண்டுமா? இவர் ஒன்றும் வரலாற்று ஆசிரியர் கிடையாது. பெரிய அறிவியலாளரும் கிடையாது. ஒரு கூற்றை சொல்ல வருகிறார் தன்னுடைய ஒரு கூற்றை சொல்ல வருகிறார் அப்படி என்றால் அதை மட்டும் சொல்லிவிட்டு போக வேண்டியது தானே. அத்தனை பேரை கேவலப்படுத்த வேண்டிய அந்த கேவலமான ஒரு ஈன புத்தி இருக்கிறது. அதாவது நீங்கள் எல்லாம் தப்பு நான்தான் சரி என நினைப்பது இருக்கிறதல்லவா? அதனால் தான் அவர் ஒரு மட்டமான மனிதர் என சொல்கிறேன். இதை அவர் சொல்லி இருக்க வேண்டிய அவசியமே இல்லை” என பதிலளித்த ஜேம்ஸ் வசந்தன் அவர்களிடம், “இவ்வளவு நேரம் நீங்கள் பேசிய போது உங்களை அறியாமல் நீங்கள் என்னென்ன சொன்னீர்கள் தெரியுமா? முட்டாள் என்று சொன்னீர்கள்” எனது திரும்ப நாம் கேட்டபோது, இல்லை இல்லை அறியாமல் என்றெல்லாம் சொல்லாதீர்கள் நான் ஒரு கேமரா முன்னால் அமர்ந்து இருக்கிறேன், என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் என தெரிந்துதான் இது யூட்யூபில் போகும் கீழே என்னென்ன விமர்சனங்கள் வரும் என்ன என்ன எல்லாம் சொல்லி திட்டுவார்கள், என்று எல்லாம் தெரிந்து… 28 வருடமாக மீடியாவில் இருக்கிறேன். நான் ஒன்றும் 18 வயது இளைஞன் அல்ல உணர்ச்சிவசப்பட்டு பேசுவதற்கு, ஆன்மீகத்திற்கு உள்ளே போனவருக்கு எதுவுமே இல்லை என்றால் அது ஏமாற்றுக்காரர் தானே” என்று பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…
'இசையமைப்பாளர் இளையராஜா என் குரு... ஆனாலும் அவர் மட்டமான மனிதர்!'- ஜேம்ஸ் வசந்தனின் காட்டமான விமர்சனம்! வீடியோ இதோ
Latest News
சினிமா
கடும் குளிரில் உருவான லியோ திரைப்படம்.. படக்குழுவினரை கவுரவிக்கும் விதத்தில் வெளியான சிறப்பு வீடியோ இதோ..
சினிமா