மான்ஸ்டர் திரை விமர்சனம்
By Sakthi Priyan | Galatta | May 17, 2019 17:14 PM IST
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் SJ சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மான்ஸ்டர். மின்சார வாரியத்தில் வேலை பார்க்கும் அரசு அதிகாரியாக, சொந்த வீடு வாங்கி குடியேற நினைக்கும் ஹீரோவாக வருகிறார் SJ சூர்யா.
வள்ளலாரை வழிபடும் அமைதியான ரோலில் நடித்துள்ளார். எலியிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் கட்சிகளில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கடைசியில், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணத்துடன் வளர்ந்த எஸ்.ஜே.சூர்யா அந்த எலியை கொன்றாரா? பிரியா பவானி சங்கரை கரம் பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மான்ஸ்ட்ரான எலியின் மீதிக்கதை.
பிரியா பவானி சங்கர் படம் முழுக்க அழகான குடும்ப பெண்ணாக வந்து கவர்கிறார். கருணாகரன் காமெடி கதாபாத்திரமாக இல்லாமல், குணச்சித்திர வேடத்தில் வருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு கருணாகரன் காமெடி ஒர்க் ஆகியுள்ளது. இந்த உலகில் வாழும் எந்த உயிர்களையும் கொல்லக் கூடாது என்ற கருத்தை இந்த படத்தில் சொல்லியிருக்கின்றனர்.
ஜஸ்டின் பிரபாகரன் இசை படத்திற்கு மிகப்பெரிய வலு. கதைக்கு ஏற்ற இசை மற்றும் பாடல்கள் நன்றாக உள்ளது. எடிட்டிங் மற்றும் கேமரா பணிகள் பக்க பலமாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த சம்மருக்கு குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம் இந்த மான்ஸ்டர்.
கலாட்டா ரேட்டிங் - 2.5/5