தனக்கே உரித்தான ஸ்டைலில் மிக அழுத்தமான கதை களங்கள் கொண்ட தரமான திரைப்படங்களை வழங்கி ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கர்ணன். தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் கலைப்புலி.S.தாணு அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு மாபெரும் வெற்றி பெற்றது. 

இதனையடுத்து தனது திரைப்பயணத்தில் மூன்றாவது திரைப்படமாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரான படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் மாமன்னன் படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 4வது திரைப்படமாக தயாராகிறது வாழை.  தொடர்ந்து கவனம் ஈர்க்கும் படைப்புகளை கொடுக்கும் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பான வாழை திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் பூஜை உடன் தொடங்கப்பட்டது.

நடிகர் கலையரசன் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோருடன் 4 சிறுவர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் வாழை திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் வாழை திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நாவி ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. 

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து விறுவிறுப்பாக வாழை திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் வாழை திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருப்பதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாழை முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது- உறுதுணையாய் நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியும் ப்ரியமும்" எனக் குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் பதிவு இதோ…
 

M4. வாழை
- முதற்கட்ட படபிடிப்பு நிறைவடைந்தது- உறுதுணையாய் நின்ற அனைத்துஉள்ளங்களுக்கும் நன்றியும் ப்ரியமும் ❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/thACnW6qxw

— Mari Selvaraj (@mari_selvaraj) January 11, 2023