கௌரி கிஷன் நடிப்பில் மறையாத கண்ணீர் இல்லை டீஸர் வெளியானது !
By | Galatta | August 29, 2020 18:47 PM IST
96 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை கௌரி கிஷன். பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிறுவயது ஜானுவாக தோன்றி ரசிகர்களை ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகிஇருக்கும் கௌரி கிஷன், படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கௌரி கிஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் பாடல் ஆல்பம் மறையாத கண்ணீர் இல்லை. இதன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது.
தினேஷ் இளங்கோ மற்றும் அட்சய் SV இயக்கத்தில் உருவாகும் இந்த படைப்பிற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். தற்போது இந்த பாடலின் டீஸர் வெளியாகி இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார். மதன் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மாஸ்டர் படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு எடவன் லிரிக்ஸ் எழுதியுள்ளார்.
மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கும் விஷ்ணு எடவன் பாடல் வரிகள் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறையாத கண்ணீர் இல்லை மியூசிக்கல் குறும்படத்தை காண ஆர்வத்தில் உள்ளனர் திரை ரசிகர்கள்.
கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் கௌரி கிஷன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் டைட்டில் லுக் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் கௌரி கிஷன். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
SPB Charan's latest official update on SPB's health condition - check out!
29/08/2020 06:00 PM
Samantha's Semma reply to a man who asked about her pregnancy!
29/08/2020 03:50 PM