இயக்குனராக ரஜினிகாந்த் - விஜயகாந்தை வைத்து ஹிட் படங்கள் கொடுத்தவர்... மனோபாலாவின் மறைவால் சோகத்தில் ரசிகர்கள்!

இயக்குனராக மனோபாலா இயக்கிய படங்கள் ஒரு பார்வை,manobala passed away fans remembering him as director | Galatta

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வந்த மனோபாலா அவர்கள் திடீரென காலமானார். கல்லீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் மனோபாலா கடந்த 15 நாட்களாக வீட்டிலேயே தனக்கான சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி இன்று மே 3ம் தேதி மனோபாலா காலமானார். 69 வயதில் உயிரிழந்த மனோபாலாவின் மறைவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகராக எண்ணற்ற திரைப்படங்களில் எக்கச்சக்கமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த மனோபாலா ஆரம்ப கட்டத்தில் இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்தவர்.

இயக்குனர் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பல படங்களில் பணியாற்றி பின்னர் இயக்குனராக உயர்ந்த மனோபாலா கடந்த 1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். இதனை அடுத்து 1985 ஆம் ஆண்டு மோகன், ராதிகா, நளினி ஆகியோர் இணைந்து நடிக்க மனோபாலா இயக்கிய பிள்ளை நிலா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து மீண்டும் நடிகர் மோகன் உடன் கைகோர்த்த மனோபாலா பாரு பாரு பட்டணம் பாரு படத்தையும் இயக்கினார். இதனிடையே டிசம்பர் 31 எனும் கன்னட படத்தை இயக்கிய மனோபாலா தனது சிறைப்பறவை திரைப்படத்தில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் உடன் இணைந்தார்.

தொடர்ந்து மீண்டும் கார்த்திக் உடன் இணைந்து தூரத்து பச்சை படத்தை இயக்கிய மனோபாலா தனது அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முதல் முறையாக கைகோர்த்தார். மனோபாலா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ராதிகா இணைந்து நடித்து வெளிவந்த ஊர்க்காவலன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயகாந்துடன் இணைந்த மனோபாலா என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் படத்தை இயக்கினார். தொடர்ந்து பிரபுவுடன் மூடு மந்திரம், நிழல்கள் ரவி கதாநாயகனாக நடித்த தென்றல் சுடும் ஆகிய படங்களை இயக்கிய மனோபாலா ஹிந்தியில் ரேகா & ராதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த மேரி பாட்டி சிர்ஃப் மேரா ஹை இன்னும் ஹிந்தி படத்தையும் இயக்கியுள்ளார்.

அடுத்தடுத்து சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர், சரத்குமார் நடித்த வெற்றிப்படிகள், விஜயகாந்த் நடித்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அருண்பாண்டியன் நடித்த முற்றுகை, ரகுமான் நடித்த கருப்பு வெள்ளை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாரம்பரியம், பிரகாஷ்ராஜ் நடித்த நந்தினி ஆகிய படங்களை இயக்கிய மனோபாலா கடைசியாக ஜெயராம் வடிவேலு இணைந்து நடித்த ஹாரர் காமெடி படமான நைனா படத்தையும் இயக்கினார். மனோபாலா அவர்களின் மறைவால் வாடும் ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் அவர் நடித்த படங்கள் மற்றும் இயக்கிய படங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த நடிகர் மனோபாலா அவர்களின் மறைவுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.நாளை (மே 4) வளசரவாக்கத்தில் மனோபாலா அவர்களின் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

தளபதி விஜயின் லியோ - சூர்யாவின் கங்குவா இடையில் போட்டியா?- தயாரிப்பாளர் KEஞானவேல் ராஜாவின் தரமான பதில் இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ - சூர்யாவின் கங்குவா இடையில் போட்டியா?- தயாரிப்பாளர் KEஞானவேல் ராஜாவின் தரமான பதில் இதோ!

“படத்துல நான் பேசுறது School பையன் மாதிரி இருந்துச்சாம்..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கௌதம் மேனன் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“படத்துல நான் பேசுறது School பையன் மாதிரி இருந்துச்சாம்..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கௌதம் மேனன் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

அடேங்கப்பா.. இரண்டே நாளில் இத்தனை கோடியா?.. பொன்னியின் செல்வன் 2 Collection report .. -  உற்சாகத்தில் ரசிகர்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

அடேங்கப்பா.. இரண்டே நாளில் இத்தனை கோடியா?.. பொன்னியின் செல்வன் 2 Collection report .. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..