எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடுத்த சில தினங்களில் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வெளிவருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்திருக்கும் தளபதி விஜய் நடிப்பில் பக்கா ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட்டடித்த நிலையில் பின்னணி இசையில் என்ன மேஜிக் செய்திருப்பார் என ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். வருகிறா அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் நா ரெடி, BADASS மற்றும் அன்பெனும் ஆயுதம் என்ற மூன்று பாடல்களையும் எழுதிய பாடலாசிரியர் விஷ்ணு எடவன் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "மெலடி பாடலாக வந்திருக்கும் இந்த அன்பெனும் பாடல் கேட்டு தளபதி விஜய் என்ன சொன்னார் அவரிடம் இருந்து வந்த பாராட்டு என்ன?" எனக் கேட்டபோது, “உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உன் (லோகேஷ் கனகராஜ்) படத்தில் மெலடியா என சொல்லும்படியாக தான் இருந்தார். ஏனென்றால் வழக்கமாக அவ்வளவு இதமான விஷயங்கள் லோகேஷ் அண்ணாவின் படங்களில் இருக்காது. அப்படி இருக்கும் போது பாடலை கேட்ட பிறகு அவருக்கு (தளபதி விஜய்) பாடல் ரொம்ப பிடித்து இருந்தது. நான் இந்த மெலடி பாடலை எழுத கிளம்புவதற்கு முன்பு அவரை பார்த்துவிட்டு தான் கிளம்பினேன். படத்தொகுப்பு நடந்து கொண்டிருந்தபோது அவர் பார்ப்பதற்காக வந்திருந்தார். அப்போது நான் எழுதுவதற்காக போகும்போது என்னிடம், "என்னடா எழுத போற?" என்று கேட்டார். இந்த மாதிரி இந்த பாடல் எழுதப் போகிறேன் என்றேன் "ஆல் த பெஸ்ட் டா" என்றார். "தேங்க்ஸ்ண்ணா" என்று போய்விட்டேன் அவ்வளவுதான். அதன் பிறகு எழுதி விட்டு வந்தபின் பயங்கரமான பேச்சுகள் எல்லாம் இருக்காது. இது என்னுடைய வேலை நான் செய்துவிட்டேன். அது அவருடைய வேலை அவர் செய்துவிட்டார் என்பது போல் தான் இருக்கும் மறுபடியும் எங்காவது பார்க்கும்போது பேசும்போது மட்டும் கட்டிப்பிடித்து, “சூப்பரா இருக்கு செமயா இருக்கு” என்பார். அவருக்கு BADASS பாடல் ரொம்ப பிடித்தது. நேரில் பார்க்கும்போது பேசுவது தான் அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது இதுவரைக்கும். படத்தினுடைய அவுட் பார்த்துவிட்டும் சார் ரொம்ப ஹேப்பியாக இருக்கிறார். எனவே அவர் ஹாப்பியாக இருக்கும் போது எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தி தான்” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட விஷ்ணு எடவனின் முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.