லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் படம் 2.0. 

Lyca Announced About The Fan Made Posters And To Appreciate Their Creativity As A Fan Made Promotion

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஏமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் நடித்துள்ளனர்.

Lyca Announced About The Fan Made Posters And To Appreciate Their Creativity As A Fan Made Promotion

தற்போது படக்குழுவினர் தரப்பிலிருந்து வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால் ரசிகர்களின் படைப்பார்வத்தை வெளிக்கொண்டுவரும் நோக்கில் அவர்களது படைப்பை பாராட்டும் விதமாக ஒரு பதிவை பதிவிட்டனர்.

அதில் 2.0 படம் சார்ந்து, சூப்பர் ஸ்டார் சார்ந்து வரும் போஸ்டர்களை, டிஜிட்டல் ஓவியங்களை தினமும் அவர்களது பக்கத்தில் தேர்ந்தெடுத்து வெளியிடபோவதாகவும் அறிவித்திருக்கின்றனர். ரஜினி ரசிகர்கள் தாண்டி அனைத்து திரை ஆர்வம் உள்ள திறமைசாலிகளுக்கு இது சிறந்த மேடையாகும்.

Lyca Announced About The Fan Made Posters And To Appreciate Their Creativity As A Fan Made Promotion