லியோ திரைப்படத்தை பார்த்த தளபதி விஜயின் ரியாக்ஷன் என்ன என்பதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து கொண்டார். ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ திரைப்படம் நாளை அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆகிறது தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் கிட்டதட்ட 25,000 முதல் 30,000 திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இணைந்துள்ள நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்த லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கத்தில் பக்கா ஆக்சன் படமாக வரும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்கம் செய்திருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் மேயாத மான், ஆடை, குளுகுளு படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி இருவரும் திரைக்கதை வசனங்களில் பணியாற்றியுள்ளனர். லியோ திரைப்படத்தின் ட்ரெய்லரில் அமைந்திருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் பக்கா விஷுவல் ட்ரீட் உறுதியாக இருக்கிறது என்பதை தெளிவாக காட்டி இருக்கும் நிலையில், நாளை படத்தில் இன்னும் என்னென்ன சர்ப்ரைஸ்கள் இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் LCUவில் லியோ திரைப்படம் இருக்கிறதா இல்லையா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு நாளை பதில் கிடைத்து விடும்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில் தளபதி விஜய் அவர்கள் லியோ திரைப்படத்தை பார்த்து விட்டாரா படம் பார்த்த பிறகு என்ன சொன்னார் என கேட்டபோது "ஆமாம் பார்த்து விட்டார் அவருக்கு மூன்று VERSIONகளில் காட்டினேன் முதலில் ஒன்று டப்பிங் முடிந்த பிறகு ஒன்று பின்னர் கடைசியாக பின்னணி இசை எல்லாம் முடிந்த பிறகு ஒரு முறை காட்டினேன் பார்த்துவிட்டு எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களையும் வரிசையாக கைக்குழுக்கு வாழ்த்து விட்டு கடைசியாக என்னை கட்டிப்பிடித்து தேங்க்ஸ் என சொன்னார்" என்று தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் முழு வீடியோ இதோ…