தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. முதல்முறையாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகும் அதே சமயத்தில் அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக இருப்பதால் இந்த பொங்கல் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தின் தளபதி விஜய் நடிக்கிறார். வரிசையாக மாநகரம், கைதி, மாஸ்டர் & விக்ரம் எனது வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்திருக்கும் தளபதி 67 திரைப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

முன்னதாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில் முதற்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றனர். தளபதி விஜய் உடன் இணைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் தளபதி 67 படத்தின் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ள நிலையில் லத்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் தளபதி 67 குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தளபதி 67 திரைப்படம் LCUல் இருக்குமா தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டுகள் எப்போது வரும் எனக்கு கேட்கப்பட்டபோது, 
“கொஞ்ச நாளாகவே இதை சொல்லி சொல்லி எனக்கே பழகிவிட்டது. தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்புக்கு பின்னர் தெரிவித்தால் தான் சரியாக இருக்கும். தற்போது வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் போதும் போதும் என சொல்லும் அளவிற்கு வந்து கொண்டே இருக்கும்  நானே பத்திரிகையாளர்களை அழைத்து அனைத்தையும் விவரமாக தெரிவிக்கிறேன். தற்போது வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகும் தருவாயில் இருப்பதால் வேறு எந்த விதமான DIVERTIONம் வேண்டாம். எனவே நீங்கள் எவ்வளவு கேட்டாலும் என்னுடைய பதில் இதுவாகத்தான் இருக்கும் எல்லாமே ஜனவரியில் தெரிவிக்கிறோம்” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.