பிரபஞ்சம் அதன் போக்கில் ஆரோக்கியமான சூழலில் இருக்கின்றதென்றால் காரணம் காதல் தான். கொண்டாட்டம் நிறைந்த காதல் மனிதர்களை எல்லா நாட்களிலும் உயிர்ப்புடன் வைத்து இருக்கின்றது. நிஜ வாழ்க்கையில் காதல் ஒருபுறம் இயங்கினாலும் திரையில் தோன்றும் காதல் ஜோடிகள், காதல் கதைக்கும் ரசனை சற்று கூடுதலாகவே உள்ளது. அதன்படி மனிதர் அதிகம் நேரம் செலவிடும் சினிமாவிலும் காதல் காலம் கடந்தும் இயங்கி கொண்டு இருக்கிறது. அதில் சில காதல் கதை நிஜ காதலர்களை வெகு நாட்களாக கவர்ந்து வருகிறது. திரையில் ஜொலித்த ஜோடிகள் நிஜத்தில் அளப்பறியாத காதலுடன் இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன் படி இந்த காதலர் தினத்தில் மக்களை அதிகம் கவர்ந்த கோலிவுட் நிஜ ஜோடிகள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு. மற்றும் கலாட்டா தமிழ் மீடியா சார்பில் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்.
1. மணிரத்தினம் – சுஹாசினி
இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமை இயக்குனர் மணிரத்தினம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த சுஹாசினி அவர்களை கடந்த 1988 ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தை ஒன்றாக இணைந்து இயக்கி வருகின்றனர்.
2. அஜித் – ஷாலினி
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் ஜாம்பவானான அஜித் குமார் தென்னிந்திய திரையுலகில் மிக முக்கிய நடிகையாக வலம் வந்த நடிகை ஷாலினி 2000 ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து ‘அமர்களம்’ என்ற திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கொண்ட காதல் ஜோடிகளில் முக்கியமானவர்கள் இவர்கள்.
3. சூர்யா – ஜோதிகா
தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களின் ஒருவரான சூர்யா. தென்னிந்தியா சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகாவை 2006 ல் திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகாலமாக காதலர்களுக்கு மிக பிடித்த காதல் ஜோடியாக இருப்பவர், இருவரும் தொடர்ந்து பல படங்களில் தற்போது நடித்து வருகின்றனர், மேலும் இருவரும் இணைந்து 2D production என்ற தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகின்றனர்.
4. நயன்தாரா – விக்னேஷ் சிவன்
தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா கடந்த ஆண்டு 2022 ல் இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா ‘நானும் ரௌடி தான்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து ‘Rowdy Pictures’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகின்றனர்.
5. உதயநிதி ஸ்டாலின் – கிருத்திகா
பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 2002 ம் ஆண்டில் கிருத்திகாவை மணந்தார். கிருத்திகா தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ‘வணக்கம் சென்னை’ , ‘காளி’, ‘பேப்பர் ராக்கெட்’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
6. ஜிவி பிரகாஷ் குமார் – சைந்தவி
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் 2013 ல் பிரபல பின்னணி பாடகி சைந்தவி யை மணந்தார்.
7. குஷ்பூ – சுந்தர் சி
தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பூ அவர்கள் 2000ல் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரை இயக்கிய பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி அவர்களை திருமணம் முடித்தார். இருவரும் இணைந்து தற்போது அவ்னி தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார்கள்.
8. பிரசன்னா – சினேகா
90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா பிரபல நடிகரான பிரசன்னாவை 2012 ல் திருமணம் செய்து கொண்டார்.
9. அட்லீ – ப்ரியா
தமிழ் சினிமாவின் தொடர் பிளாக் பஸ்டர் கொடுத்த மிக முக்கியமான இயக்குனர் அட்லீ கடந்த 2014 ல் துணை நடிகை பிரியா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
10. கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்
நடிகர் கார்த்திக் ன் மகனான நடிகர் கெளதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் அவர்களை கடந்த 2022ல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து ‘தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
11. ஆதி – நிக்கி கல்ராணி
பிரபல தமிழ் தெலுங்கு நடிகரான ஆதி கடந்த 2022 ல் கோலாகலமான கொண்டாட்டங்களுடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது. இருவரும் இணைந்து ‘மரகநாணயம்’, ‘யாகவராயினும் நாகாக்க’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
12. சாந்தனு – கீர்த்தி
பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகன் நடிகர் ஷாந்தனு 2015 ல் தளபதி விஜய் தலைமையில் நிகழ்ச்சி தொகுப்பாளரான கீர்த்தியை திருமணம் முடித்தார்.
13.ஆர்யா – செய்ஷா
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான ஆர்யா கடந்த 2019 ல் நடிகை செய்ஷாவை மணந்தார். இருவரும் இணைந்து 'டெடி'. 'காப்பான்' ஆகிய படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
14. சங்கீதா – க்ரிஷ்
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவரான சங்கீதா பிரபல பின்னணி பாடகரான கிருஷ் அவர்களை 2009 ல் திருமணம் செய்து கொண்டார்.